போஸ் தனது மரணச் செய்தியை வானொலியில் கேட்டு சிரித்தார்: மெய்க்காவலர் பரபரப்பு பேட்டி

bose_security_001சுபாஷ் சந்திர போஸ் தனது மரணச் செய்தியை வானொலியில் கேட்டதாக நேதாஜியின் மெய்க்காவலர் பேட்டியளித்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தின் டக்கோவா கிராமத்தில் உள்ள சைபுத்தீன் என்கிற நிஜாமுதீன் வைத்திருக்கும் பழைய பர்மா பாஸ்போர்ட்டின்படி அவருக்கு வயது 115.

நிஜாமுதீன் சுபாஷ் சந்திர போஸின் வாழ்க்கையோடு பயணித்தவர்களில் முக்கியமான நேரடி சாட்சியங்களில் ஒருவர், அவருடைய மெய்க்காவலர்களில் ஒருவர்.

போஸ் சம்பந்தமான ஆவணங்களை மம்தா பானர்ஜி அரசு வெளியிட்டது நாடெங்கும் பரபரப்பை உண்டாக்கியிருக்கும் சூழலில், நிஜாமுதீன் நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.

அதில் நேதாஜியை கடைசியாக நான் 1947-ல் சந்தித்தேன், மாதம் நினைவில் இல்லை.

பர்மாவின் சித்தான் நதியில் தயாராக இருந்த படகில் ஏற்றி அவரை அனுப்பிவைத்தோம்.

மிகவும் குறுகலான நதியான அது இந்திய எல்லையில் கடலில் போய் கலக்கக் கூடியது.

அங்கு அவரை எங்கோ அழைத்து செல்ல ஒரு நீர்மூழ்கிக் கப்பல் தயாராக இருக்கும் என்று கூறப்பட்டது.

அவர் படகில் ஏறிச் சென்ற அடுத்த சில நிமிஷங்களில், நாங்கள் அவரை அழைத்து வந்த கார் மீது அங்கு வந்த ஒரு போர் விமானம் குண்டு வீசித் தகர்த்துவிட்டு சென்றது.

நான் அதிஷ்டவசமாகத் தப்பினேன். என்னுடன் இருந்த சிலர் மரணம் அடைந்தார்கள்.

ஆகஸ்ட் 18, 1945-ல் போஸ் மரணம் அடையவில்லை. வானொலியில் அந்தச் செய்தி வெளியானபோது அதை நேதாஜியுடன் சேர்ந்து கேட்டுக்கொண்டிருந்தோம். நேதாஜி இந்தச் செய்தியைக் கேட்டு, சிரித்தார்.

ஆனால் போஸ், அந்த விபத்து பொய் என்பதை வெளியே அறிவிக்காத காரணம் எனக்குத் தெரியவில்லை.

இரண்டாம் உலகப் போருக்குப் பின் உலகம் முழுவதும் காலனி ஆதிக்கம் முடிவிற்கு வந்து இந்தியாவிலும் ஆங்கிலேயர்கள் வெளியேறிவிடுவார்கள், பிறகு நாம் இந்தியா திரும்பலாம் என்ற எண்ணம் நேதாஜியிடம் இருந்தது.

-http://www.newindianews.com

TAGS: