உண்ணும் உணவு நம் சிந்தனைகளுக்கும், செயல்பாட்டிற்குமான அடிப்படை காரணகளில் ஒன்றாகிறது.
மண்சார்ந்த, மரபார்ந்த உணவு கலாசாரத்தை மீட்டெடுப்பது என்பது, சீரழிந்த தற்போதைய உணவு கலாச்சாரத்திலிருந்து விடுதலை பெறுவது மட்டுமல்ல, இந்த மண்ணுக்கேற்ற மானம், வீரம், மனிதநேயம் போன்றவற்றையும் மீடடெடுப்பதாகும்.
அத்தகு முயற்சியின் தொடர்ச்சியாக, நமது மறக்கடிக்கப்பட்ட மருத்துவகுணமிக்க பாரம்பரிய அரசிகளின் உணவுத்திருவிழா மற்றும் கண்காட்சியை சென்னையில் நடத்த உள்ளோம்.
இதில் அந்ததந்த அரிசிக்குகந்த வகையிலான சாப்பாடு, பலகாரங்களை சமைத்து வழங்க உள்ளோம். இத்தக பாரம்பரிய அரிசிகளை, நெல்ரகங்களை மக்கள் பார்க்கவும், வாங்கவுமான வாய்ப்பையும் ஏற்படுத்தி தருகிறோம்.
திரைப்பட நடிகர் சிவக்குமார், நடிகை ரோகிணி, உணவு நிபுணர்கள், மருத்துவர்கள், வேளாண்துறை நிபுணர்கள் பங்கேற்று பேச உள்ளனர். மாடித்தோட்டம் அமைப்பது குறித்து பயிற்சி விளக்கம், இலவச இறய்கை மருத்துவ சிகிச்சை, அக்குபிரஷர் சிகிச்சை, இயற்சை உணவுகள், பானங்கள் என அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு நாள் நிகழ்வாக இது அமைய உள்ளது. செப்டம்பர் 26, சனிக்கிழமை, இடம்; சென்னை நிருபர்கள் சங்கம், சேப்பாக்கம், கிரிக்கெட் மைதானம் எதிரில்.
-http://www.nakkheeran.in