இந்திய சுதந்திரத்துக்காக இந்திய தேசிய ராணுவம் அமைத்த சுபாஸ் சந்திர போஸின் மரணம் நாடுகளின் தவறுகளுக்காக மறைக்கப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆங்கிலேயரை எதிர்த்து, இந்திய சுதந்திரத்துக்காக, சிங்கப்பூரில் 3 லட்சம் வீரர்களை கொண்ட இந்திய தேசிய ராணுவம் அமைத்த சுபாஸ் சந்திர போஸின் தேசபக்தி, சுதந்திரப்போராட்ட வீரம், தியாகம் பரவலாக இந்திய மக்களிடம் நல்லவிதமாகவே புரிந்துகொள்ளப் பட்டிருக்கிறது.
அதற்காக, மத்திய அரசும், மேற்குவங்க மாநில அரசும் ஆவணங்களை வெளியிட்டுதான் புதிதாக அவரைப்பற்றி மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நிலையில்லை.
அவருடைய மரணம் பற்றிய குழப்பம் ஒன்றுதான் பிரச்சனை. ஆனாலும், அது திட்டமிட்டுதான் குழப்பப்பட்டுள்ளது என்பதுதான் உண்மை.
அதற்கான ஆவணம் மத்திய அரசிடமும், இங்கிலாந்து, ரஷ்யா, ஜப்பன், ஜேர்மனி போன்ற நாடுகளிடமும் நிச்சயமாக இருக்கும்.
மேற்குவங்க மாநில மம்தா அரசு நேதாஜி பற்றிய 12,744 பக்கங்கள் கொண்ட 64 ஆவணங்களை வெளியிட்டுள்ளதோடு, மத்திய அரசையும் வெளியிடுமாறு வற்புறுத்தியுள்ளது.
பிரதமர் மோடி ’மன் கி பாத்’ என்ற வானொலி உரையில் கடந்த மே மாதம் கொல்கத்தா சென்றபோது நேதாஜி குடும்பத்தினரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அவர் குடும்பத்தை சேர்ந்த பல்வேறு நாடுகளில் வாழும் 50 பேரை என் அலுவலகத்திற்கு அழைத்து உபசரிக்க உள்ளதாக கூறினார்.
நேதாஜி மரணம் குறித்த ஆவணங்களை வெளியிடுவதில் நாட்டின் பாதுகாப்பு பிரச்சனை இருக்கிறது என்று சொன்னவர் வேறு செய்திக்கு தாவியிருக்கிறார்.
மோடியே ஒரு சிறந்த தேசபக்தியாளர். நேதாஜியின் மெய்காப்பாளர் நிஜாமுதீன் (115) கால்களை தொட்டு ஆசிபெற்றவர்.
நேதாஜியின் கடைசிகால மர்மத்தை அறிந்துகொள்ள மக்களை போல ஆர்வப்படுவதோடு மட்டுமல்லாமல் அவர் முடிவுக்கு ஒரு இந்தியனாக வருந்தியுமிருப்பார்.
1945ல் நடந்த விமான விபத்தில் நேதாஜி இறந்த செய்தியை பர்மா காட்டுப்பகுதியில் தன் படைவீரர்களோடு இருந்த நேதாஜியே கேட்டு சிரித்துள்ளார். மேலும்,
1947ல் பர்மாவில் சித்தான் நதியில் தயார்நிலையில் இருந்த ஒரு படகில் நேதாஜி, மதராஸை சேர்ந்த சுவாமி, சில சீக்கியர்கள் மற்றும் ஜப்பானியர்களுடன் கடலில் எங்கோ செல்ல காத்திருந்த ஒரு நீர்மூழ்கி கப்பலுக்கு செல்ல வழியனுப்பியதுதான் தனது கடைசி சந்திப்பாக மெய்காவலர் நிஜாமுதீன் கூறியுள்ளார்.
அப்போதும் அவர்கள் வந்த காரின் மீது ஜெட் விமானத்திலிருந்து போடப்பட்ட குண்டில் சிலர் பலியாகியுள்ளனர்.
நேதாஜி மீதமுள்ள தனது படையினரை தடயங்களை அழித்துவிட்டு, அப்பாவி மக்களாய் இந்தியாவிற்குள் சென்று திருப்பமான வாழ்க்கைக்கு தயார்படுத்திவிட்டு சென்றுள்ளார்.
ஆங்கிலேயர் காந்தி, நேருவைவிடவும் நேதாஜி மீதுதான் இந்திய சுதந்திர போராட்ட எதிரியாக வெறுப்படைந்துள்ளனர்.
இந்தியாவிற்கு சுதந்திரம் அளிக்கும் அரசியல் ஒப்பந்தத்தில் நேதாஜியை பிரிட்டிஷாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது ஒரு முக்கிய அம்சமாகியிருக்கலாம்.
காந்தியை போன்ற சில தலைவர்கள் தங்களை பலி கொடுத்தாவது இந்திய சுதந்திரத்தை பெறும் குறிக்கோளோடிருந்தனர். அந்த தங்களில் தலைவர் நேதாஜியையும் சேர்த்திருக்கலாம்.
அதனால், இந்தியாவுக்குள் நுழைய நேதாஜிக்கு வழியில்லாமல் போனது, அதேநேரத்தில், இரண்டாம் உலகப்போரில் அச்சு நாடுகள் (ஜேர்மனி, ஜப்பான், பிரான்ஸ், சிங்கப்பூர்) தோல்வியடைந்ததால் அதை நம்பியிருந்த நேதாஜி வெளிநாடுகளில் வாழ்வதும் கடினமானது.
ஒருவேளை, இரண்டாம் உலகப்போரில் நேச நாடுகள் (அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இங்கிலாந்து) தோல்வியடைந்திருந்தால் அந்த நாடுகள் உதவியுடன் இந்தியாவிற்கு சுதந்திரம் நேதாஜி மூலம்கூட கிடைத்திருக்கலாம்.
உண்மையில் பிரிட்டிஷார் நேதாஜியை ஒப்படைக்க வலியுறுத்தியிருந்தால், நேதாஜியின் ஒரு உயிர் விலையில் ஒரு நாட்டின் சுதந்திரம் பெறப்பட்டது நேதாஜியின் தியாகத்துக்கு இன்னும் பெருமைதான்.
நேதாஜியின் தேசப்பற்றையும் வீரத்தையும் குறைத்து மதிப்பிட முடியாது.
அவரை தீவிரவதி என்று ஆங்கிலேயர் குற்றம்சாட்டினாலும். தன்னுடைய படைக்குள் ஆங்கிலேயருக்காக உளவுபார்த்த ஒரு இந்தியனை சுட்டு வீழ்த்திய மெய்காவலரை ஒரு உயிரை எடுத்துவிட்டியே என கண்டித்ததும், அவருக்கு எந்த நஷ்டத்திலும் கோபம் வந்தே நான் பார்த்ததில்லை என்று மெய்காவலர் கூறுவதும் தேசத்துக்காக ஆயுதம் ஏந்திய அவருக்குள்ளும் அகிம்சை இருந்ததையே காட்டுகிறது.
நேதாஜி மரணத்தை பற்றி ரஷ்யா 33 கோப்புகள் அடங்கிய ஆவணத்தை மத்திய அரசிடம் அளித்துள்ளது. ஆனாலும் மத்திய அரசு வெளியிட மறுக்கிறது.
ஒரு மாபெரும் சுதந்திர போராட்ட வீரனுடைய மரணத்தை பற்றிய உண்மையை தெரிந்துகொள்வதுதான் மக்களின் எதிர்பார்ப்பு.
மரணம் பற்றிய ஆவணங்கள் வெளியிடப்படாவிட்டாலும், அதிலிருக்கும் உண்மை கசிந்து வெளியாவதை யாராலும் தடுக்க முடியாது.
அப்போதைய ரஷ்ய அதிபர் ஸ்டாலினால் பிடித்து சிறைவைக்கப்பட்டு நேதாஜி கொல்லப்பட்டிருக்கலாம்.
இந்தியா வேறுவழியில்லாமல் சம்மத அமைதி காத்திருக்கலாம். ஆங்கிலேயர்களின் நிர்பந்தத்தால் ஒரு துரோகம் செய்ய நேர்ந்ததை மக்களுக்கு தெரியாமல் மறைத்திருக்கலாம்.
அவர் உடல் எங்கோ கொண்டுபோய் எப்படியோ கொல்லப்பட்டிருக்கலாம்.
ஆனால், அவருடைய உன்னதமான லட்சிய வாழ்க்கை, ஒவ்வொரு இந்தியனின் உணர்வையும் ஒவ்வொரு தலைமுறையிலும் தொட்டுக்கொண்டிருப்பதை எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது.
-http://www.newindianews.com