புதுடெல்லி, செப். 25- உலக வங்கி வெளியிட்டுள்ள மாசுப்பட்ட நகரங்கள் பட்டியலில் முதல் நான்கு இடங்களில் இந்திய நகரங்கள் பிடித்து சாதனை(?) படைத்துள்ளன.
வளர்ந்து வரும் நாடுகளைச் சேர்ந்த 381 நகரங்களின் காற்று மாசுப்பற்றி உலக வங்கி பட்டியலிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் முதல் 20 இடங்களில் இடம்பெற்றுள்ள நகரங்களில் 19 நகரங்கள் தெற்காசியாவை சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பட்டியலில் முதல் இடத்தில் இந்தியாவின் தலைநகர் டெல்லி உள்ளது. பீஜிங்கில் உள்ள காற்று மாசை விட டெல்லியில் மூன்று மடங்கு அதிகம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. டெல்லியைத் தொடர்ந்து பாட்னா, குவாலியர், ராய்ப்பூர் ஆகிய நகரங்கள் உள்ளன. பட்டியலில் அகமதாபாத், லக்னோ, கான்பூர், அமிர்தசரஸ் ஆகிய இந்திய நகரங்களும் இடம்பெற்றுள்ளன.
டெல்லியில் உள்ள காற்றில் நுண்ணிய துகள் ஆனது உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்த அளவையிட 15 மடங்கு அதிகமாக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
66 கோடி இந்திய மக்கள் காற்று மாசு அதிகம் உள்ள நகரங்களில் வாழ்வதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளதையும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
-http://www.maalaimalar.com
சார்! கோலாலும்பூர் என்ன டில்லி பக்கமா இருக்கு? இங்கேயும் அதே மாதிரிதானே காற்று தூமைக்கேட இருக்கே? பல வருஷமா பக்கத்து நாடு இந்தோனேசியவுளே காட்டை கொளுத்தி அண்டை நாடுகள் எல்லாம் ஒரே பொகைமுட்டமாக ஆக்கி விட்டுட்டு அப்புறமா கூட சேர்ந்து கும்மி அடிக்கிறதே அவனுங்க வேலையா போச்சு! அதை கேக்க எவனுக்கும் நாதி இல்லை…..ஏனா இந்தோனேசியாவை கண்ட எல்லாருக்கும் ஒரே பயம்……தொடை நடுங்கி பசங்க!!!