80 கோடி இந்திய இளைஞர்களால் முடியாதது வேறு யாரால் முடியும்?.. கலிபோர்னியாவில் முழங்கிய மோடி

modi-at-sapசான்ஜோஸ்: சிலிக்கேன் வேலி பயணத்தின் ஒரு கட்டமாக அங்குள்ள சாப் மையத்தில் இந்தியர்களிடையே பிரதமர் மோடி இன்று உரை நிகழ்த்தினார். தற்போது பேசி வரும் பிரதமர் மோடி குட்ஈவ்னிங் கலிபோர்னியா என்று கூறி தனது பேச்சைத் தொடங்கினார்.

பிரதமரின் பேச்சிலிருந்து…

குட் ஈவ்னிங் கலிபோர்னியா. உங்களது ஆர்வம் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது இன்று இங்கு (அமெரிக்காவில்) செப்டம்பர் 27ம் தேதி மாலை. இந்தியாவில் செப்டம்பர் 28ம் தேதி காலை. இன்று இந்தியாவின் தீரப் புதல்வன் மாவீரன் பகத் சிங்கின் பிறந்த நாளாகும். அவருக்கு நான் வணக்கம் செலுத்துகிறேன். அவர் என்றென்றும் நினைவு கூறப்படுவார்.

கலிபோர்னியாவுக்கு 25 வருடத்திற்குப் பிறகு நான் வந்துள்ளேன். பல மாற்றங்கள். பல புதுமுகங்களைப் பார்க்கிறேன். வலிமை வாய்ந்த இந்தியாவின் மாற்றத்தை கலிபோர்னியாவில் பார்க்கிறேன்.

அமெரிக்கர்கள் இந்திய வம்சாவளியினரைப் பார்த்து பெருமை கொள்கிறார்கள். இதற்காக உங்களைப் பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன். 19வது நூற்றாண்டில் எனது சீக்கிய சகோதரர்கள் அமெரிக்காவுக்கு வருகை தந்தனர் விவசாயிகளாக வந்த அவர்கள் இந்தியாவின் விடுதலைக்காக ஏங்கிக் கொண்டிருந்தனர் இன்று 21வது நூற்றாண்டில் எனது மக்கள் வறுமையை ஒழிக்க போராடிக் கொண்டிருக்கின்றனர். தனது இளமைக் காலத்தை சுதந்திரத்திற்காக காவு கொடுத்த ஒருவர் எனது நாட்டில் இருந்தார் காந்தி கூறிய கோட்பாடுகளின்படி அவர் வாழ்ந்து காட்டினார் 1975ல் அவசரகால சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டார் அவர்தான் ஜெயப்பிரகாஷ் நாராயண்..

கலிபோர்னியாவில் படிப்பதற்காக வந்தவர் ஜெயபிரகாஷ் நாராயண் இந்தியாவுக்கும், கலிபோர்னியாவுக்குமான உறவு தொன்று தொட்டு தொடர்ந்து வருகிறது இந்த நூற்றாண்டு ஆசியாவுக்கானது என்று எல்லோரும் ஒத்துக் கொள்வார்கள் ஆனால் இந்த நூற்றாண்டு இந்தியாவுக்கானது இது மோடியால் ஏற்பட்டதல்ல…

120 கோடி இந்தியர்களால் சாத்தியமான மாற்றம் இது – மோடி 16 மாதமாகி விட்டது, உங்களது சான்றிதழை எதிர்பார்க்கிறேன்..

நான் சரியாக வேலை பார்த்துள்ளேனா? வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்தையும், உடலின் ஒவ்வொரு அணுவையும் நாட்டுக்காக பணியாற்ற அர்ப்பணித்துள்ளேன் நான் இந்தியாவுக்காக வாழ்வேன்..

இந்தியாவுக்காக மடிவேன் 80 கோடி இளைஞர்களைக் கொண்ட நாடு இந்தியா.. இந்த நாட்டால் முடியாதது வேறு எந்த நாட்டால் முடியும்? இந்தியா ஊழலால் வெதும்பிப் போய்க் கிடக்கிறது மகன் 50 கோடி சம்பாதித்தால் மகள் 250 கோடி சம்பாதிக்கிறார்.. மருமகனோ 1000 கோடி சம்பாதிக்கிறார் கலிபோர்னியாவில் வைத்து காங்கிரஸை மறைமுகமாக சாடினார் மோடி

முன்பு உபநிஷத்துகள்தான் இந்தியாவின் அடையாளமாக இருந்தன இன்று அறிவியல் துறையில் இந்தியா புதிய அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளது முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்தை தொட்ட முதல் நாடு இந்தியாதான் முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்திற்கு வெற்றிகரமாக விண்கலத்தை அனுப்பினோம்

நான் பிரதமராக பதவியேற்க டெல்லி வந்தபோது 50 சதவீத இந்தியர்களிடம் வங்கிக் கணக்கே இல்லை இன்று 18 கோடி இந்தியர்களுக்கு வங்கியில் கணக்கு திறக்கப்பட்டுள்ளது மின்னணு நிகர்வாகம் என்பது எளிதான நிர்வாகம்..

செலவு குறைந்த நிர்வாகமும் கூட காஸ் மானியத்தை விட்டுக் கொடுங்கள் என்று நான் கேஷுவலாக கூறியதை ஏற்று 30 லட்சம் இந்தியர்கள் அதை விட்டுக் கொடுத்தனர் அனைவருக்காகவும் நாங்கள் உருவாக்கியதுதான் “ஜாம்” (JAM) ஜே என்பது ஜன் தன் திட்டம்..

ஏ என்பது ஆதார் திட்டம்.. எம் என்பது மொபைல் கவர்னென்ஸ் என்பது உலகம் முழுவதும் இன்று தீவிரவாதம் பரவிக் கிடக்கிறது ஒவ்வொரு நாடும் தீவிரவாதத்திற்கு எதிராக கை கோர்த்து வருகிறது ஒவ்வொரு இந்தியரின் கனவும் நனவாக வேண்டும்..

125 கோடி இந்தியர்களின் கனவும் நனவாக வேண்டும் கலிபோர்னியா மாகாண ஆளுநருக்கும், காங்கிரஸ் எம்.பிக்களுக்கும் என்னை இங்கு அழைத்ததற்காக நன்றி சொல்லிக் கொள்கிறேன் தனது பேச்சை முடிக்கும் முன்பு பாரத் மாதா கி ஜெய், ஜெய் வீர் பகத் சிங் என்று கோஷமிடுமாறு கூட்டத்தினரைக் கேட்டார் மோடி ஒட்டு மொத்த இந்தியர்களும் திருப்பிச் சொல்ல சாப் மையமே இந்தியர்களின் முழக்கத்தால் அதிர்ந்தது சாப் அரங்கில் மோடி ஆற்றிய உரை முடிவுற்றது

tamil.oneindia.com

TAGS: