அமெரிக்கா, சீனா நாடுகளை பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தை பிடித்தது இந்தியா..!

india_map_001டெல்லி: அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளை விடவும், வளர்ந்து வரும் பொருளாதார நாட்டுகள் மத்தியில் இந்தியா, அதிகளவிலான அன்னிய முதலீட்டைக் கவர்ந்து முதல் இடத்தைப் பிடித்துள்ளது. 2015ஆம் ஆண்டில் அதிக அன்னிய முதலீட்டைக் கவர்ந்துள்ள நாட்டுகளின் பட்டியலில் அமெரிக்க, சீன, பிரட்டன் போன்ற நாடுகளைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா முதல் இடத்தைப் பிடித்துள்ளதாகப் பைனான்சியல் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

2015ஆம் ஆண்டில் உலக நாடுகளில் செய்யப்பட்ட முதலீட்டு அளவுகளைக் கொண்டு செய்யப்பட்ட ஆய்வில் இந்தியா அமெரிக்காவை விட 4 பில்லியன் டாலரும், சீனாவை விட 3 பில்லியன் டாலர் அதிகமான முதலீட்டைக் கவர்ந்து 31 பில்லியன் டாலர் பெற்று இப்பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

ஆண்டு நடுவில் செய்யப்பட்ட இந்த ஆய்வில் இந்தியா சுமார் 31 பில்லியன் டாலர் முதலீட்டைப் பெற்று அன்னிய முதலீட்டில் புதிய உச்சத்தை அடைத்துள்ளது. இது இந்திய சந்தைக்கு ஒரு மைல்கள் எனவும் கூறலாம்.

மத்திய அரசு அறிவித்து வரும் தொடர் திட்டங்களின் மூலம் இந்திய சந்தை அதிகளவிலான முதலீட்டைத் தொடர்ந்து பெற்று வருகிறது. இதில் மேக் இன் இந்தியா மற்றும் டிஜிட்டல் இந்தியா திட்டங்கள் முக்கிய இடம் வகிக்கிறது.

மேலும் உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் போன்ற பல அமைப்புகள் புதிய வர்த்தகத் துவங்க மற்றும் விரிவாக்கம் செய்ய இந்தியா மிகவும் சிறந்த இடம் என அறிவித்துள்ளது. அதுமட்டும் அல்லாமல் முதலீடு, வளர்ச்சிக்குச் சிறப்பான இடமாகவும் இந்தியா உள்ளது எனவும் தெரிவித்துள்ளது. இதனால் உலக நாடுகள் மத்தியில் இந்திய சந்தையின் மீதான மதிப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் உலக நாடுகளைப் பார்க்கும் போது சீனா பொருளாதார நெருக்கடியிலும், ஐரோப்பிய சந்தை நிதிநெருக்கடி மற்றும் அரசியல் பிரச்சனைகள் காரணமாக முதலீட்டைக் கவர வழியில்லாமல் நிற்கிறது. இவை அனைத்தும் இந்தியாவிற்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது.

2015ஆம் ஆண்டில் இந்தியா 31 பில்லியன் டாலரும், சீனா 28 பில்லியன் டாலரும், அமெரிக்கா 27 பில்லியன் டாலரும், பிரட்டன் 16 பில்லியன் டாலரும் பெற்றுள்ளது. இதன் பின் மெக்சிகோ 14 பில்லியன் டாலர், இந்தோனேசியா 14 பில்லியன் டாலர், வியட்நாம் 8 பில்லியன் டாலர், ஸ்பெயின் 7 பில்லியன் டாலர், மலேசியா 7 பில்லியன் டாலர். ஆஸ்திரேலியா 7பில்லியன் டாலர் ஆகிய நாடுகள் டாப் 10 பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

-http://tamil.goodreturns.in
TAGS: