சித்தூர்: ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பிடிபட்டன. இவற்றைக் கார்களில் கடத்தி வந்த தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
சித்தூர் மாவட்டம் கார்வேட் நகரில் அம்மாநில வனத்துறையினர் மற்றும் போலீசார் நடத்திய வாகன சோதனையில், 3 கார்களில் கடத்தி வரப்பட்ட 40 செம்மரக்கட்டைகளைப் பறிமுதல் செய்தனர்.
மேலும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 3 கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியைச் சேர்ந்த 3 பேரைக் கைது செய்தனர். இதேபோல் எஸ்.ஆர். புரம் கிராமம் அருகே போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்ட போது, காரில் கடத்தி வரப்பட்ட 16 செம்மரக் கட்டைகள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனர். மேலும், இது தொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
அது என்னடா, செம்மரத்தைக் கடத்த தமிழ் நாட்டுக் காரன்தான் போகின்றானா?. அப்ப இந்த இரண்டு மாநிலத்து எல்லையிலும் ‘ஓசோன் ஓட்டையைப்’ போல பெரிய ஓட்டை இருக்கா?
பிடிபட்டவர்கள் வெறும் ‘கூரியர்’ வேலை செய்பவர்களே. இதற்கு மொத்த முதலாளி ஆந்திராவில் ஒளிஞ்சிகிட்டு இருக்கான் அவனை இவனுங்களால அவனை பிடிக்க முடியலையே. தமிழ் நாட்டுக்காரன்னா அவனின் பூர்வீகத்தையும் பார்த்துச் சொல்லிடுங்கப்பா காரணம் தமிழ் நாடு எங்கெல்லாம் அடிபட்டு உதைப் பட்டு வந்தாரை எல்லாம் வாழ வைக்கும் கருணையுள்ளம் மிகுந்த நாடு!
தவறு என்று தெரிந்தும் தவறை செய்கின்றனர் . தண்டனை உண்டு என்று தெரிந்தும் பேராசையில் உயிரை விடுவது ஏனோ ?