காஷ்மீரில் இருந்து ராணுவத்தை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை: இந்தியா

Kashmir-Mapகுஜராத்: காஷ்மீரில் இருந்து ராணுவத்தை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். குஜராத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை கூறியுள்ளார். நாட்டில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை மற்றவர்கள் சொல்லி கேட்க தமக்கு விருப்பமில்லை என்று அவர் கூறியுள்ளார். அவ்வாறு யாரெனும் கூறினால், அதை பொருட்படுத்த தயாராக இல்லை என்றும் மனோகர் பாரிக் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐநா சபை கூட்டத்தில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் நவாஷ் செரீப் காஷ்மீர் பிரச்சனையை எழுப்பினார். எல்லை பகுதியில் பதற்றத்தை தவிர்க்கவும், அமைதியை நிலைநாட்டவும் 4 அம்சம் திட்டம் ஒன்றை வெளியிட்டார். எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் ஐநாவின் மேற்பார்வை குழு கண்காணிக்க வேண்டும், தாக்குதலை நிறுத்த இரு நாடுகளும் உறுதி எடுக்க வேண்டும், காஷ்மீரில் இருந்து இந்திய ராணுவத்தை திரும்பப் பெற வேண்டும், சியாசினியில் உள்ள படைப் பிரிவுகளை இரு நாடுகளும் நிபந்தனையின்றி திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர் 4 அம்சம் திட்டம் ஒன்றை முன் வைத்தார். இதற்கு இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது.

-http://www.dinakaran.com

TAGS: