மும்பையில் விநாயகர் கோயிலில் பிறந்த இஸ்லாமிய குழந்தைக்கு ‘கணேஷ்’ என பெற்றோர் பெயர் சூட்டியுள்ளனர்.
மும்பையை சேர்ந்த நூர்ஜகான் அதிகாலை நான்கரை மணியளவில் பிரசவ வலியால், தன் கணவர் இலியாஸ் ஷேக்கை எழுப்பியுள்ளார்.
இதையடுத்து இலியாஸ் உடனடியாக, மருத்துவமனைக்கு செல்ல டாக்சி பிடித்துள்ளார்.
அப்பகுதியில் குறுகலான சந்துக்கள் அதிகம் இருந்ததால், நூர்ஜகானுக்கு பிரசவ வலி அதிகமாக, டாக்சி ஓட்டுனர் பயத்தில் இருவரையும் இறக்கிவிட்டுச் சென்றுள்ளார்.
அப்போது அருகில் இருந்த விநாயகர் கோயிலில் நூர்ஜகானை அமர வைத்துவிட்டு, மற்றொரு டாக்சியை பிடிக்கச் இலியாஸ் சென்றுள்ளார்.
பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருந்த நூர்ஜகானை கண்ட அங்கிருந்த பெண்கள், அவரை விநாயகர் கோயிலின் உள்ளே அழைத்துச்சென்று, அந்த இடத்தை பிரசவ அறையாக மாற்றினர்.
அங்கிருந்த மூதாட்டிகள் பிரசவம் பார்க்க, சில நிமிடங்களில் அழகிய ஆண் குழந்தை பிறந்தது.
பின்பு தாயையும், குழந்தையையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
நூர்ஜகான் கூறுகையில், அருகில் இருந்து விநாயகர் கோயிலை கண்டவுடன், கடவுளே என்னுடன் இருப்பதை உணர்ந்து தைரியமானேன் என்று கூறியுள்ளார்.
இலியாஸ் கூறுகையில், நாங்கள் என்ன செய்வதென்று புரியாமல் நின்று கொண்டிருந்த போது தான், நான் அருகில் இருந்த விநாயகர் கோயிலை கண்டேன்.
நாங்கள் கோயில் அருகில் சென்ற போது, நாங்கள் அழைக்காமலே, அங்கிருந்த பெண்கள் ஓடி வந்து எங்களுக்கு உதவினர் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், அந்த குழந்தைக்கு “கணேஷ்” என்று பெயர் சூட்ட முடிவெடுத்துள்ளனர்.
-http://www.newindianews.com
இந்த பெயரை மற்றும் வரை இந்த பிள்ளை வளர்ந்தும் பள்ளி வாசலுக்குள் நுழையமுடியாது
இது என்ன நீங்க நினைக்கிற மாதிரி “மலேசிய..னு” நினைச்சிங்களா” இந்தியா ஒரு மத சார்பற்ற நாடு. அங்கு எதுவும் எடுபடும்.