ராஜஸ்தானை சேர்ந்த ராஜ்வீர் மீனா என்ற மாணவர் 70 ஆயிரம் பை கணித மதிப்பு எண்களை நினைவுபடுத்தி கூறி சாதனை படைத்துள்ளார்.
வேலூர் விஐடி பல்கலைக்கழக மாணவரான ராஜ்வீர் மீனா கடந்த மார்ச் மாதம், கண்களை துணியால் கட்டிக் கொண்டு 70 ஆயிரம் பை கணித மதிப்பு எண்களை நினைவுபடுத்தி கூறினார்.
ஒரு வட்டத்தின் சுற்றளவுக்கும் அதன் விட்டத்துக்கும் இடையே யான விகிதம் பை என்றழைக்கப்படுகிறது.
இந்த வரையறையை வைத்து எந்த அளவுடைய வட்டத்தின் சுற்றளவையும் கண்டுபிடித்து விடலாம்.
இதற்காக அவர், மொத்தம் 9 மணி நேரம் 27 நிமிடங்கள் எடுத்துக் கொண்டார்.
அவரது இந்த சாதனை கின்னஸ் உலக சாதனையில் இடம்பெற்றுள்ளது.
மேலும், இந்த சாதனைகான சான்றிதழ் கடந்த 1ம் திகதி வழங்கப்பட்டது.
-http://www.newindianews.com
ஒன்னுமே புரியலே! ஆனால் கின்னஸ் சாதனைக்காக வாழ்த்துகள்!