ஸ்ரீநகர்: மாட்டிறைச்சி விவகாரம் விஸ்வரூபமெடுத்துள்ள நிலையில் வதந்திகள் எதுவும் பரவாமல் இருக்க ஜம்மு காஷ்மீரில் இணையசேவைகள் முடக்கப்பட்டுள்ளன. ஜம்மு காஷ்மீரில் மாட்டிறைச்சி விற்பனைக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் தடை விதித்தது.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த உச்சநீதிமன்றம், மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை விதித்து நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை அளித்திருக்கின்றனர். அதனால் மாட்டிறைச்சி விற்பனைக்கான தடை உத்தரவை 2 மாத காலம் நிறுத்தி வைக்க வேண்டும். மேலும் 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் இது தொடர்பான வழக்கை விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்நிலையில் சட்டசபை எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் சுயேட்சை எம்.எல்.ஏ. ரஷீத் மாட்டிறைச்சி விருந்து ஒன்றை நடத்தினார். இந்த விவகாரம் அம்மாநில சட்டசபையில் இன்று எதிரொலித்தது. அப்போது ரஷீத்தை பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் சூழ்ந்து கொண்டு தாக்கினர். இதனால் அம்மாநில சட்டசபையே போர்க்களமானது. இதைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்த மாட்டிறைச்சி விவகாரத்தை முன்வைத்து வீண் வதந்திகள் கிளம்பி வன்முறை சம்பவங்கள் நிகழாத வகையில் ஜம்மு காஷ்மீர் முழுவதும் உடனடியாக இணையசேவைகள் முடக்கப்பட்டன. வன்முறை சம்பவங்கள் நிகழவில்லை என உறுதியாகும் வரை இணைய சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் என அம்மாநில போலீசார் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் உத்தர பிரதேசத்தில் மாட்டுக்கறி உண்டார் என்ற சந்தேகேத்தின் ஒரு முதியவர் கொல்லபட்டார் இவருடைய மகன் இந்திய விமான படையில் உள்ள ஒரு இந்திய வீரன். ஒரு ஐந்து அறிவு படைத்த மாட்டுக்கு உள்ள பாதுகாப்பு கூட, தன் தாய் நாட்டை பாதுகாக்கும் ஒரு வீரனின் குடும்பத்திற்கு பாதுகாப்பு இல்லை.
இன்றைக்கு அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் குடியேறி இருக்கும் இந்தியர்கள், இஸ்லாமிய மற்றும் கிருஸ்துவர்களை தவிர்த்து ஹிந்துக்களிடம் கேட்டுபாருங்கள் அந்த நாடுகளின் வெள்ளை இன மக்கள் உணவு என்னவென்று? மாட்டுக்கறி இல்லைஎன்றால் அடி உதைதான்.இந்தியாவை தவிர்த்து மற்ற எல்ல நாடுகளிலும் மாடு தான் முதன்மை உணவு.நேபாளில் கூட மாடு அறுக்கும் திருவிழா வருடா வருடம் நடக்கிறது.
இது மாக்கள் வாழும் நாடு. அங்கே அப்படித்தான் நடக்கும்.
கொல்லாமை உண்ணாமை எல்லாம் இயற்கையாகவே கருணை உள்ளம்படைத்தவருக்குத்தான் வரும் ‘திருவாசகத்தில் ஒரு பதிகத்தின் கடைசி வரி “ஈசன் அவன் எவ்வுயிர்க்கும் இயல்பானான் சாழலோ” என சைவ சமயதர்களை தவிர்த்து உயிர்களின் பெருமை வேறு யார் அறிவார்கள் ?