டெல்லியில் 6 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய உணவுத்துறை அமைச்சர் ஆசிம் கானை முதல்வர் கெஜ்ரிவால் அதிரடியாக நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளார்.
டெல்லி ஆம்ஆத்மி அரசில் உணவுத்துறை அமைச்சராக இருந்து வந்த ஆஷிம்கான், உணவுத்துறையில் சிலருக்கு கான்ட்ராக்ட் விட்டதில் பேரம் பேசியதாக புகார் எழுந்தது.
இது குறித்த எழுத்துப்பூர்வமான குற்றச்சாட்டு மற்றும் ஓடியோ டேப் ஒன்றும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கவனத்துக்கு வந்தது.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கெஜ்ரிவால், அமைச்சர் ஆசிம்கான் மீது ஒரு ஊழல் புகார் வந்துள்ளது. இது தொடர்பாக எனக்கு ஓடியோ ஆதாரமும் கிடைத்தது.
ஆசிம் அகமது கானின் சொந்த தொகுதியான மதியா மஹாலில் கட்டுமான நிறுவன அதிபர் கட்டி வரும் அடுக்குமாடி கட்டிடப் பணிகள் தடையின்றி தொடர அந்த நிறுவன அதிபர் லஞ்சம் கொடுத்துள்ளார்.
ஓடியோவை ஆய்வு செய்த பிறகு, அமைச்சர் பதவியில் இருந்து ஆசிம் கானை நீக்க முடிவு செய்தோம்.
இவர் மீது சி.பி.ஐ விசாரணை நடத்தவும் நாங்கள் பரிந்துரை செய்யவுள்ளோம்.
ஆம் ஆத்மி அரசு, ஊழலுக்கு எதிரானது என்பது ஆசிம் அகமது கான் நீக்கத்தின் மூலம் புலப்படுத்தியுள்ளோம்.
எனது மகனாக இருந்தாலும் கூட ஊழல் புகார் வந்தால் நான் நடவடிக்கை தயங்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
-http://www.newindianews.com
வாழ்த்துக்கள் உங்களை போன்ற அரசியல் வாதிகள் தான் இந்த உலகதிட்கு தேவை
அடுத்த பிரதமராக நீங்கள் வரலாமே.