டெல்லியில் அசோக் விஹார் பகுதியில் உள்ள பாங்க் ஆப் பரோடா கிளையில் சட்டவிரோதமாக ரூ.6,000 கோடி அந்நிய செலாவணி பரிமாற்றம் நடந்ததாக எழுந்த புகார் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. பணப்பரிமாற்றம் தொடர்பாக வங்கி அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் என பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
ஹாங்காங்கிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்வதாக கூறி முன்பணமாக 59 நிறுவனங்களின் பெயரில் ரூ.6,000 கோடி பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், பொருட்களின் இறக்குமதி எதுவும் நடக்காத சூழ்நிலையில் சட்டவிரோதமாக இந்த அந்நிய செலாவணி மோசடியை வங்கி மேற்கொண்டுள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில், 6000 கோடி ரூபாய் அந்நிய செலாவணி வழக்கு தொடர்பாக 4 பேரை அமலாக்க இயக்குநரக அதிகாரிகள் இன்று கைது செய்துள்ளனர்.
-http://www.maalaimalar.com