நேதாஜியின் குடும்பத்தினர் பிரதமருடன் இன்று சந்திப்பு

netaji-subhas-chandra-bose-பிரதமர் நரேந்திர மோடியை சுதந்திரப் போராட்டத் தலைவர் நேதாஜியின் குடும்பத்தினர் புதன்கிழமை (அக்டோபர் 14) சந்திக்கவுள்ளனர்.

இந்தச் சந்திப்பின் போது, 70 ஆண்டுகளுக்கு முன்பு மர்மமான முறையில் மாயமான நேதாஜியின் நிலை தொடர்பான ரகசியக் கோப்புகளின் விவரத்தை வெளியிட நடவடிக்கை எடுக்குமாறு அவரது குடும்பத்தினர் பிரதமரிடம் கேட்டுக் கொள்வர் எனத் தெரிகிறது.

இதையொட்டி, பிரதமர் இல்லத்தில் புதன்கிழமை மாலை 5.30 மணிக்கு இச்சந்திப்புக்கு அவரது அலுவலக அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர். நேதாஜி குடும்பத்தைச் சேர்ந்த சுமார் 50 பேர் இச்சந்திப்பில் பங்கேற்பர் எனத் தெரிகிறது.

நேதாஜியின் நிலை தொடர்பாக கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக சர்ச்சைக்குரிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. 1948-49 ஆண்டில் நேதாஜி உயிருடன் இருந்ததாக பிரிட்டன், அமெரிக்க உளவு அமைப்புகள் கூறி வருகின்றன.

மேலும், இந்தியா விடுதலை அடைந்த காலகட்டத்தில் தென்கிழக்கு ஆசிய நாட்டில் நேதாஜி இருந்ததாகவும் ஒரு தகவல் உள்ளது. அவர் வாழ்ந்த காலத்தில் அப்போதைய மத்திய உளவு அமைப்புகள் சேகரித்த அவரது நடமாட்டம் தொடர்பான தகவல்கள் மிகவும் ரகசிய ஆவணமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.

நேதாஜி விவரங்கள் தொடர்பான 64 கோப்புகளை மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கடந்த மாதம் வெளியிட்டார். இதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் மீண்டும் பரபரப்பாகியுள்ளது.

-http://www.dinamani.com

TAGS: