நடிகர் சங்க தேர்தல் நடக்கும் இடத்தில் தெலுங்கர்கள் தேர்தலில் போட்டியிடுவதை கண்டித்து நடந்த முற்றுகை போராட்ட ம் நடந்தது போராட்ட த்தை ஒருங்கிணைத்த தமிழர் நடுவ தோழர்களுடன தமிழர் முன்னேற்ற கழக தோழர்கள மற்றும் தமிழ் தேசிய போராளிகள்.
Non of the Tamil Nadu T.V Channels broadcast this news very shameful to the T.V. Channels
போங்கடா கல கூத்தாடி பக்கிகளா …மத்த இன நடிகைகளை ஈ ன்னு இளிச்சிகிட்டு ரசிக்கும் போது தெரியலையா தெலுங்கும் கேரளாவும் ???
தமிழன் இழந்த அனைத்து உரிமையையும் மீட்க வேண்டும்…..வந்தேறிகளை வந்தோடிகளக்குவீர்…
தென் இண்டியன் நடிகர் சங்கத்தில் நடப்பது மொழி இனப் போராட்டம் அல்ல. பல ஆண்டுகளாக ஆக்ககரமான செயல் இழந்து சினிமா நாடக நடிகர் குடும்பத்தின் நலனை காப்பாற்றாமலும், சங்கத்தின் நிருவாக முறைக் கேடுகளை நிவர்த்தி செய்யாமலும் வெறுமனே நாற்காலியை சூடேற்றிக் கொண்டிருந்த கும்பலை விரட்ட இன்னொரு இளைஞர் அணி உருவாகியது. அதற்கு விசால் பொறுபேற்க வேண்டிய கட்டாயத்திற்குள் ஆனார். பழயன கழிதலும் புதியன புகுதலுமாக தேர்தல் முடிவுகள் மெய்பித்துள்ளன. இது அவர்களின் குடும்பச் சண்டை. இன்றைக்கு சிண்டுமயிர் புடித்து அடித்துக் கொள்வார்கள். நாளையே நாங்களெல்லாம் நடிகர்கள் என்று கட்டிப் பிடித்து ஒன்றும் இல்லாதது போல் நடிக்க ஆரம்பித்து விடுவார்கள். கூத்தாடிகளின் கூத்துக்கு நம் நேரத்தை வீணாக்காமல் நமது அன்றாட வாழ்க்கையை கவனிப்போமாக.
தமிழ் நாட்டவர் இந்த இடத்தில் அறிவிலிகளாக எனக்கு தென்படுகிறார்கள்.தமிழ் மொழி தமிழர்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல. அது இப்பொழுது தமிழ் நாட்டுக்கு மட்டும் சொந்தம் என்று இராமல் தென்னிந்தியாவிலேயே பரவலாக பேசப்படும் வட்டரா மொழி யாகும். வடக்கில் இந்தி போல தமிழை தெற்கில் கொள்ளலாம். ஆகவே தென்னிந்திய நடிகர் சங்கத்தில் தெலுங்கர் மலையாளிகள் வருவதை தவிர்க்க முடியாது, மாறாக அது வரவேற்கக் கூடிய ஒன்று. தமிழுக்கு வட்டரா ரீதியாக மதிப்பும் அங்கீகாரமும் கிடைக்கும். எப்படி குஜாராத்துக்கார மோடி இந்தியாவின் பிரதமரானரோ அது போல தமிழ் பேசும் எல்லா நடிகர்களும் தமிழ் நாட்டுக்குச் சொந்தமானவர்களே.
நேற்று ஒன்று பேசி, இன்றைய மாற்றத்துக்கு ஏற்றார் போல் திரித்துக் கூறுவோர் நம்மிடம் நிறைய பேர் உள்ளனர். உணர்ந்து திருந்தினால் நல்லது. ஜாதி மதம் பாராமல் ஒற்றுமையுடன் ஒன்றிணைந்து வாழ்வதும் வளர்வதுமே சிறப்பு. ஒற்றுமையில் சுகம் காணுங்கள்!! வேற்றுமையில் குளிர் காயாதீர் அன்பரே!!! ஒற்றுமையுடன் உயர்வோம் வாழ்வோம் வாழ்விப்போம்!!!!
இன்று நடந்த நடிகர் சங்க தேர்தலில் விசால் ரெட்டி அழுதுக்கொண்டே அய்யோ என்னை அடிச்சிடாங்க அடிச்சிடாங்க என்ன ஆனாலும் சரி தேர்தல் நடக்கனும்ங்க என நீலிக்கண்ணீர் வடித்து சிம்பதி உருவாக்க தொலைக்காட்சியில் பேட்டி கொடுக்கும்போது சில வருடங்கள் முன் கருணாநிதியை கைது செய்யும்போது அய்யோ என்னை கொலைப்பன்றாங்க என்னை அடிக்கிறாங்க கொல்றாங்களே என்று அதே நீலிக்கண்ணீர் வடித்து தான் இந்த மக்களை ஏமாற்றினார்…
அன்று கருணாநிதி அவரின் பாதையில் விசால் ரெட்டி…
முன்னொரு காலத்தில் தமிழே தென் இண்டிய மொழியாக வாழ்ந்தது என்பது நிதர்சன உண்மை என்பதால், தமிழுக்குத் தென் இண்டிய வட்டார ரீதியில் மதிப்பும் அங்கீகாரமும் கிடைக்க வேண்டும் என்பது தமிழர் வேண்டுதலை அல்லவே!. இப்பொழுது அப்படி வேண்ட வேண்டும் என்ற அளவிற்கு இட்டுச் சென்றோர் தமிழரிடம் இருந்து பிரிந்துச் சென்ற நம் தொப்புள்கொடி உறவுகள்தாம் என்பதை புரிந்துதான் கருத்துக்கள் வெளிப்படுகின்றனவா?. இன்று கன்னடத்தில் ஒரு தமிழ் பள்ளி நடத்துவதற்கு கன்னடவர்கள் வழி விடுவதில்லை காரணம் அங்கே தமிழ் ஒதுக்கப் படுகின்றது. இங்குள்ள அரசாங்கம் தமிழுக்குக் கொடுக்கும் அங்கீகாரத்தைக் கூட கன்னட அரசாங்கம் தமிழுக்கு கொடுப்பதில்லை! ஆந்திரத்தைச் சொல்லவே வேண்டாம். எனக்குத் தெரிந்து, தமிழ் படத்தில் கிருட்டினர் வேடம் போட்டு நடித்து தமிழர் வாரிக் கொடுத்த பணத்தில் சோறு சாப்பிட்ட என்.டி. இராமராவ் அவர்களும் தமிழை வெறுத்து ஒதுக்கியவர்தாம். அப்படி இன்னும் பல. இவ்வாறு நம் மொழியை ஒதுக்கி அவர்தம் மொழிக்கு முதல் அங்கீகாரம் கொடுத்து வாழும் தெலுங்கு, கன்னடம், மலையாள மொழி நாட்டவர்களா தமிழ் மொழிக்கு மதிப்பும் அங்கீகாரமும் கொடுக்க ஆவலோடு காத்திருக்கின்றார்கள்?. இதைச் சொன்ன நடு நிலையானுக்குத் தென் இண்டிய தற்கால சூழ்நிலை தெரியுமோ? தமிழ் நாட்டவர்கள் அறிவிலிகள்தாம்! வாழ வந்தோருக்கு சிகப்புக் கம்பள வரவேற்ப்புக் கொடுத்து தமிழ் நாட்டு வளங்களை அள்ளிக் கொடுத்துத் தமிழர் இன்று நடுத் தெருவில் வாழ விடப்பட்டதால் தமிழ் நாட்டுத் தமிழர்கள் அறிவிலிதான்! வட்டார மொழிகள் வளர 20- ம் நூற்றாண்டு முற்பகுதியில் தெற்க்கே தமிழரும் வடக்கே வங்காளிகளும் (‘Bengali’) வடமொழி ஆதிக்கக்காரர்களின் களத்தில் இறங்கி ஆங்கிலேயர்களின் உதவியுடன் வெற்றிக் கொண்ட பொழுது அதன் நற்பலனை அனுபவித்தது தெலுங்கு, கன்னடம், மலையாள மொழியும்தான். ஆனால் நம்மைப் பார்த்து ‘எட்டப்பன் பரம்பரை” என்று கூறும் நாவோருக்கு அவர்கள் நன்றி கெட்டவர்கள் என்பதை எடுத்துச் சொல்லாமல் அல்லது சொல்ல முடியாமல் வாழும் தமிழ் நாட்டு தமிழர்கள் அறிவிலிகள்தாம்! தமிழ் பேசும் எல்லா நடிகர்களும் தமிழ் நாட்டுக்குச் சொந்தமானவர்கள் என்றால், தமிழ் நாட்டு எல்லையில் இருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் தமிழ் நாட்டிற்குள் ஆறாக வரும் மலை நீருக்கு மட்டும் தமிழ் நாட்டுத் தமிழர் சொந்தக்காரர்கள் இல்லை என்று விரட்டி அடிக்கும் பொழுதும் தமிழ் நாட்டுத் தமிழர் அறிவிலிகள்தான். இதை அறியாமல் இந்நாட்டுத் தமிழர் தமிழ் நாட்டுத் தமிழரைப் பார்த்து “அறிவிலிகள்” என்று சொல்வது அறிவாளித்தனமாகுமோ?
தமிழர் நாடு சித்தர்கள் ஆட்சியில் இருக்கும் வரை மற்றவர்கள் தமிழ் மண்ணுக்கு விளைவிக்கும் தீங்குகள் உரமாகவே அமையும்!!!