கச்சதீவு அருகே இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களின் படகை உடைத்து, பல லட்சம் மதிப்பிலான மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தியதோடு இரும்பு குண்டுகளால் தாக்கி அச்சுறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்றுக் காலை இராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து 500 க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் மீன்பிடி அனுமதி டோக்கன் பெற்று மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
இவர்கள் கச்சதீவுக்கு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் வாட்டர் ஸ்கூட்டர் விரைவு ரோந்துபடகில் வந்த இலங்கை கடற்படையினர், அவ்வழியாக வந்த படகுகளை தடுத்து நிறுத்தி இரும்புக் குண்டுகள் மற்றும் கற்களால் வீசி தாக்குதல் நடத்தியதோடு,
படகுகளிலிருந்த மீன்பிடி வலைகள் மற்றும் மீன்பிடி கருவிகளை சேதப்படுத்தி கடலில் வீசி எறிந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இலங்கை கடற்படையினரின் எச்சரிக்கையை மீறி உயிர்பயத்தால் நிற்காமல் சென்ற சேவியர் என்பவருக்கு சொந்தமான படகை உடைத்து சேதப்படுத்தியதோடு, ஜயநார், ராமசந்திரன், சேவியர்,சுப்பிரமணி உள்ளிட்ட தமிழக மீனவர்களையும் அடித்து துன்புறுத்தி, மிரட்டியதையடுத்து மீனவர்கள் கரை திரும்பியதாக தெரிவித்துள்ளனர்.
இலங்கை கடற்படையினரின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட சேவியர் என்ற மீனவர் இது குறித்து தெரிவிக்கையில்,
நம்ம எல்லையில்தான் மீன்பிடித்துக் கொண்டிருந்தோம். அதிகாலையில் திடீரென எங்க படகுக்கு அருகே வந்து, எங்கள் மீது இரும்பு குண்டு மற்றும் கற்களால் சரமாரியாக தாக்கியதோடு, எங்களது படகை முட்டி கடலில் முழ்கடிக்க முயன்றனர்.
நாங்களும் உயிர் பிழைத்தால்போது என வேகமாக கரைக்கு திருப்ப முயற்சித்தும் எங்களை விடாமல் துரத்தி துரத்தி எப்படியாவது படகை கடலில் முழ்கடிக்க வேண்டும் என்ற நோக்கில் படகு மீது மோதினர்.
நாங்க நாலு பேர் உயிர்பிழைப்போம் என்ற நம்பிக்கையே இல்லை. ஏதோ அதிஷ்டவசமாக உயிர் தப்பி வந்துள்ளோம். எங்களது படகை சரி செய்ய சுமார் ரூ, மூன்று லட்சம் செலவாகும் என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
தொடச்ர்சியாக இலங்கை கடற்படையினரின் கொடூர தாக்குதல் மற்றும் மீன்பிடி சாதனங்களை சேதப்டுத்தும் போக்கால் இராமேஸ்வரம் துறைமுகத்தில் பதட்டநிலை ஏற்பட்டுள்ளது.
இலங்கை கடற்படையினரின் அச்சுறுத்தலால் மீன்பிடி தொழிலாளர்கள் அண்டை மாநிலத்திற்க்கு இடம் பெயர்ந்து செல்லத் தொடங்கிவிட்டதாக இராமேஸ்வர மீனவ அமைப்புகள் குற்றம் சுமத்தியுள்ளன.
இன்று இலங்கை கடற்படையினரின் அத்துமீறலால் 50க்கும் மேற்பட்ட படகுகளில் தலா ரூ 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் சேதப் படுத்திய படகை சரி செய்ய சுமார் ரூ இரண்டு லட்சம் செலவு ஆகும் எனவும் பாதிக்கப்பட்டு கரை திரும்பிய மீனவர்கள் வேதனை தெரிவித்தனர்.
-http://www.tamilwin.com
கச்சத்தீவு 2000 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது. சுதந்திரம் என்ற பெயரில் இந்த 60 ஆண்டுகளாக தமிழ் இனம் இந்திக்கு அடிமையாய் மாறிவருகிறது .மீண்டும் தமிழர்கள் உரிமையோடு கச்சதீவு சென்றுவர தமிழ் இனம் ஒன்றுபட்டு செயல்படவேண்டும் மோசடிகளுக்கு அந்த உணர்வு இல்லை
எங்கே எண்கள் த-ல-ர்-ப-தி ??? வீரவாள் எடுத்து யாரவது கொடுத்தால் சிங்கள படைகளை ஓட ஓட விரட்டி அடிப்பார் ..கூடவே அஞ்சா நெஞ்சனும் சேர்ந்தால் இலங்கை பஸ்மம் ஆகிவிடும் ..எச்சரிக்கை
சற்காரிய ஊழல் விசாரணையில் இருந்து தப்ப …அபோது கச்சதீவை இலங்கைக்கு தாரைவார்க்க துணை போனது இந்த வழுக்கை ..இன்னும் இந்த வண்டிலை இழுக்க வானரங்கள் போகின்றன