காந்தியின் கொள்ளுப்பேத்தி மீது 53 கோடி ரூபாய் மோசடி வழக்கு

gandhi_granddaughter_001தென்னாப்பிரிக்காவில் காந்தியின் கொள்ளுப்பேத்தி மீது சுமார் 53 கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டதாக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காந்தியின் உறவினர்களில் பலர் தென்னாப்பிரிக்காவில் பல்வேறு சமூகச் சேவைகளில் ஈடுபட்டு, அங்கேயே வாழ்ந்து வருகின்றனர்.

காந்தியின் கொள்ளுப்பேத்தியான ஆஷிஷ் லதா ரம்போகின் (45) என்பவர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமூகச் சேவை தொடர்பாக தொண்டு செய்யும் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவில் இருக்கும் பிரபல செல்வந்தர்களை சந்தித்த அவர், தென்னாப்பிரிக்க மருத்துவமனைகளில் கட்டில்களுக்கு படுக்கை வசதி செய்வதற்காக இந்தியாவில் இருந்து மூன்று கண்டெய்னர்களில் லினென் துணிகள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அந்த துணிகளை டெலிவரி எடுக்க 11 மில்லியன் ராண்டுகள் தேவைப்படுவதாக அவர் கூறியதை நம்பிய மஹராஜ் என்பவர் 6.2 ராண்டுகளை கொடுத்துள்ளார். மேலும் ஒருவரும் 5.2 ராண்டுகளை அளித்து உதவி புரிந்துள்ளார்.

ஆனால், அப்படி எந்த துணி கண்டெயனரும் டர்பன் துறைமுகத்துக்கு வராததால், போலி ரசீதுகளை தயாரித்து தொண்டு நிறுவனத்தின் பெயரால் மோசடி செய்துள்ளார் என பணத்தை பறிகொடுத்த இருவரும் புகார் அளித்துள்ளனர்.

இதையடுத்து பொருளாதார குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்தும் ‘ஹாக்ஸ்’ அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அவரது மோசடிகள் அம்பலமாகியுள்ள‌து.

எனவே, போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி செய்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் டர்பன் நகரில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அவர் மீது பொலிசார் வழக்கு தொடுத்துள்ளனர். இந்த விசாரணைக்கு நேற்று அவர் நேரில் ஆஜராகியுள்ளார்.

ஆஷிஷ் லதா ரம்போகினின் தாயார் எலா காந்தி, தென்னாப்பிரிக்காவின் பிரபல மனித உரிமை ஆர்வலராக பல ஆண்டுகளாக தொண்டாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

-http://www.newindianews.com

TAGS: