இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்தில் 2 லட்சம் பேர் பலியாகின்றனர்: உலக சுகாதார நிறுவனம்

உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட ‘சர்வதேச சாலை பாதுகாப்பு ஆய்வறிக்கை – 2015’-ல் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்தில் 2,07,551 பேர் உயிரிழப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 2014ம் ஆண்டில் சாலை விபத்துகளில் ஒட்டு மொத்தமாக 1,37,572 உயிரிழப்புகள் நேரிட்டுள்ளன.

உலக அளவில் மக்கள் தொகை 4 சதவீதமும், மோட்டார் வாகன உபயோகம் 16 சதவீதமும் உயர்ந்துள்ளது.

உலக அளவில் சாலை விபத்துக்களை தடுக்கவும், பாதுகாப்பு விழிப்புணர்வுகளை அதிகரித்தும் கடந்த 3 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கையின் பயனாக ஏராளமான உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.

ஆனால் இந்தியாவில் 2007ம் ஆண்டு முதலே, சாலை விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்துக் கொண்டேதான் வருகிறது.

வளர்ந்த நாடுகளை விட, குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் நாடுகளில் இரண்டு மடங்கு சாலை விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகம் என்கிறது இந்த ஆய்வறிக்கை.

-http://www.dinamani.com

TAGS: