கென்யாவில் மக்கள் பசுவின் ரத்தத்தை குடித்தாலும் அவற்றை கொல்வதில்லை: மோகன் பகவத்

rss_mohan_001கென்யா நாட்டில் மக்கள் உயிர்வாழ்வதற்காக பசு ரத்தத்தை குடிப்பார்களே தவிர அவற்றை கொல்வதில்லை என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேசியுள்ளார்.

நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய மோகன் பகவத், கென்யா நாட்டில் கடும் வறட்சியின் போது, மக்கள் உயிர்வாழ்வதற்காக பசு ரத்தத்தை குடிப்பார்கள்.

அவர்கள், மூங்கிலால் உருவாக்கப்பட்ட குழாயை பசுக்களின் நரம்புகளில் செலுத்தி ரத்தத்தை உறுஞ்சி குடிப்பார்கள்.

ஆனால், அவற்றை கொன்று அதன் இறைச்சியை சாப்பிட மாட்டார்கள். உணவிற்காக பசுக்களை கொல்வது என்பது அங்கு கிடையாது.

ஏனெனில், ஆப்பிரிக்க நாடான கென்யாவில் பசு மாடுகள் கொல்லப்படுவது தடை செய்யப்பட்டுள்ளது என்று பேசியுள்ளார்.

-http://www.newindianews.com

TAGS: