உடல் உறுப்பு தானம் செய்யுங்கள் ; ரேடியோ உரையில் மோடி வேண்டுகோள்

man ki baatபுதுடில்லி: மனதின் குரல் (மன் கி பாத்) என்ற ரேடியோ நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி மாதம் தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் பேசி வருகிறார் . இன்று பிரதமர் பேசுவது 13 வது உரையாகும் . இன்றைய உரையில் ஒருவரின் உயிரை காப்பாற்ற உதவும் உடல் உறுப்பு தானம் இன்னும் அதிகரிக்க வேண்டும், இதற்கு அனைவரும முன் வரவேண்டும் என்று அழைப்பு விடுத்தார். இன்றைய நிகழ்ச்சியில் மோடி பேசுகையில் ; இந்தியா- தென் ஆப்ரிக்கா மோதும் கிரிக்கெட் போட்டியில் இரு அணிகளும் தலா 2 போட்டிகளை வென்றுள்ளது . இன்று நடக்கவிருக்கும் போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும், இந்திய அணிக்கு எனது வாழ்த்துக்கள் !

தற்போது உடல் உறுப்பு தானம் செய்வது மிக முக்கியமானது, இதுன் மூலம் ஒருவர் வாழ்வு ஒளிமயமாகிறது, சிறுநீரகம், கல்லீரல் , இதயம் தேவை அதிகம் உள்ளது ஆனால் இது கிடைப்பதில் சிரமம் உள்ளது . அனைவரும் உடல் உறுப்பு தானம் செய்ய முன் வரவேண்டும் . இது ஒரு கடமையாக கருத வேண்டும், உடல் உறுப்பு தானத்தில் தமிழ்நாடு முதலிடமாக உள்ளது. உடல் உறுப்பு தானம் தொடர்பாக 1800114770 என்ற ஹெல்ப்லைன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

கேரள மாநிலம் சித்தூரில் இருந்து ஒரு மாணவி எனக்கு கடிதம் எழுதியுள்ளார் இதில் மதிப்பு மிக்க விஷயங்கள் அடங்கி இருந்தன அவரும் உடல் உறுப்பு தானத்தில் இவ்வளவு விழிப்புணர்வு பெற்று இருந்தால் என்பது எனக்கு மிக்க மகிழ்ச்சி .

நவராத்திரி மற்றும் விஜயதசமி பண்டிகையை, கோலாகலமாக கொண்டாடியுள்ள நாம், விரைவில் தீபாவளி திருநாளையும் அதே உற்சாகத்துடன் கொண்டாட உள்ளோம். நாட்டு மக்களுக்கு முன்கூட்டியே தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். தூய்மை இல்லாமல் தீபாவளியா அனைவரும் தூய்மை இந்தியா திட்டத்தில் பங்கு கொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றேன் . நாட்டில் தூய்மை பணி மிக முக்கியமானது ஆகும் மக்கள் அனைவரும் இதில் மனதார பங்கு கொள்ள வேண்டும் . மீடியாக்கள் இதற்கு பெரிதும் துணை நிற்கிறது இன்னும் பங்கு பெற வேண்டும் .இவ்வாறு மோடி பேசினார்.

மக்களின் கருத்துக்கு வரவேற்பு : ரேடியோ உரை நிகழ்த்துவது தொடர்பாக மக்கள் தங்களின் கருத்துக்களையும், கேள்விகளையும் சமூக வலைதளங்கள் மூலம் அனுப்பி வைக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார் . இதனால் பல தரப்பினரும் தங்களின் எண்ணங்களை பிரதமருக்கு அனுப்பி வைத்து வருகின்றனர்.

மூலை முடுக்கெல்லாம் ரேடியோ மூலம் இவரது உரை சென்றாலும் மொபைல் அப்ளிகேஷனிலும் அவரது பேச்சை கேட்க வழி செய்யப்பட்டுள்ளது .

-http://www.dinamalar.com

TAGS: