ஆண்களுக்குப் போட்டியாக பெண்களும் போதையில் உலாவும் கொடுமை.. கரூரில்!

drunkar-womanகரூர்: கரூரில் சமீப காலமாக ஆண்களுக்கு இணையாக பெண்களும் போதையில் ஆங்காங்கே ரகளையில் ஈடுபடுவதும், விழுந்து கிடப்பதும் அதிகரித்து வருவதால் மக்களிடையே கவலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் எது விற்கிறதோ இல்லையே மது மட்டும் நன்றாக விற்கிறது. மது விற்பனையில் தமிழகம் ஆண்டுக்கு ஆண்டு சாதனை படைத்தும் வருகிறது.

மது ஒழிப்புக்காகவும், மது விலக்குக்காகவும் சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்தில் மிகப் பெரிய அளவில் போராட்டங்கள் எல்லாம் நடந்தன. ஆனால் எல்லாம் பழங்கதையாகி விட்டது. மீண்டும் மது வாடை தமிழகத்தை படு வேகமாக மயக்கி வருகிறது.

இந்த நிலையில் கரூரில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் மது போதையில் பொது இடங்களில் நடமாடுவதும், விழுந்து கிடப்பதும் அதிகரித்து வருகிறது. கரூர் மினி பேருந்து நிலையம் ஓரத்தில் ஒரு பெண்மணி நேற்று இரவு வரை போதையில் மற்றொரு வாலிபருடன் கிடந்துள்ளார்.

இதே பகுதியில் கரூர் லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் குடும்ப பெண் ஒருவர் மதுவை அருந்தி விட்டு, பேருந்துகளையும், இரு சக்கர வாகனங்களையும் மறித்து கெட்ட வார்த்தைகளினால் அனைவரையும் அபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி அரங்கேறியது.

அதை தட்டிக் கேட்ட தன் புருஷனையே செருப்பால் அடித்த சம்பவமும் அரங்கேறியது. ஆண்கள்தான் பொறுப்பில்லாமல் குடிகாரர்களாக திரிகிறார்கள் என்றால் பெண்களும் அதேபோல மது வாடையுடன் உலா வருவது சமூகத்தில் கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.

tamil.oneindia.com

TAGS: