உலக நாடுகளின் செல்வ வளம் மற்றும் அதன் வளர்ச்சி குறித்த ஆய்வில் பிரிட்டன் நாட்டின் முக்கிய ஆய்வு நிறுவனம் ஒன்று ஈடுபட்டு இருந்தது. கடந்த 15 வருடத்தில் உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக் குறித்து முழுமையாக ஆய்வு செய்ததில் இந்திய நாட்டின் செல்வ வளம் சுமார் 211 சதவீதம் அதிகரித்துள்ளது. அதிகம் செல்வ வளர்ச்சி பெற்ற நாடுகளின் டாப் 10 பட்டியலில் அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான் போன்ற வல்லரசு நாடுகளுக்கும் இடம் கிடைக்காத போது இந்தியாவிற்கு 5வது இடம் கிடைத்துள்ளது நாட்டின் சிறப்பு.
2000-2015ஆம் ஆண்டுக் காலத்தில் உலக நாடுகளின் செல்வ வளர்ச்சி குறித்த ஆய்வில், இந்தியா கடந்த 15 ஆண்டுகளில் சுமார் 211 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இதே பட்டியலில் இடம்பெற்றுள்ள அமெரிக்க வெறும் 41 சதவீதம் உயர்ந்துள்ளது.
டாப் 10 பட்டியலில் இந்தியா 5 வது இடத்தைப் பிடித்துள்ள நிலையில், இந்தோனேசியா, சீனா (341%), ரஷ்யா(253%), ஆஸ்திரேலியா(248%) ஆகிய நாடுகள் முதல் நான்கு இடங்களைப் பிடித்துள்ளது. இதில் இந்தோனேசியா கடந்த 15 வருடத்தில் சுமார் 362 சதவீதம் வரையில் உயர்ந்து தனி நபரின் செல்வத்தின் அளவு 1,300 டாலரில் இருந்து 6,000 டாலராக உயர்ந்துள்ளது.
டாப் 10 பட்டியலில் வல்லரசு நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஜப்பான் நாடுகள் இடம்பெறவில்லை. மேலும் கடந்த 15 வருடத்தில் ஜப்பான் 39 சதவீதமும், அமெரிக்கா 41 சதவீதமும், பிரிட்டன் 58 சதவீதம் வரை மட்டுமே உயர்ந்துள்ளதாக ஆய்வுகளின் முடிவுகள் தெரிவிக்கிறது.
2000-2015ஆம் ஆண்டுக் காலகட்டத்தில் இந்தியா பொருளாதார மற்றும் அரசியல் ரீதியாகப் பல மாறுதல்களைப் பார்த்துள்ளது. இக்காலகட்டத்தில் இந்திய நாட்டின் செல்வ வளம் சுமார் 211 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இதனால் தனிநபர் செல்வ வளம் 900 டாலரில் இருந்து 2,800 டாலராக உயர்ந்துள்ளது.
மேலும் இந்த ஆய்வில் இந்தியாவில் அதிகப் பணக்காரர்கள் உருவாகும் நகரமாகவும், ஆசிய பசிபிக் சந்தையில் வேகமாக வளர்ந்து வரும் டாப் 20 நகரங்களில் புனே இடம்பெற்றுள்ளது.
2004 முதல் 2014ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் புனேவில் மில்லியனர்கள் எண்ணிக்கை 60 இல் இருந்து 250 ஆக உயர்ந்து 317 சதவீத உயர்வைப் பதிவு செய்துள்ளது.
மலேசியா எங்கே உள்ளது ?
“ஊழல் நன்கொடை” வரைபடத்தில் முதன்மை நாடாக மலேசியா இடம்பெற கடினமாக் நஜிப் உழைத்து கொண்டிருக்ககும்போது, “செல்வ வளர்ச்சி”-யின் வரைபடத்தில் மலேசியாவை தேடும் லொள்ளுதானே வேணாம்கிறது.
இந்தியா என்றுமே வளமான நாடு தான். அங்கு வறுமை நீடிக்கிறது என்றால் அரசியல்வாதிகளின் அயோக்கியத்தனம் தான் காரணம். அவர்கள் மற்றவர்களைத் தலை தூக்க விடுவதில்லை. எல்லா வளங்களையும் தாங்களும் தங்கள் குடும்பமும் தான் அனுபவிக்க வேண்டும் என்னும் “தொண்டை” அவர்கள் விடுவதில்லை. அவர்கள் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்க ஓர் ஐந்து ஆண்டுகள் அரசியல்வாதியாக இருந்தால் போதும்!