தில்லியில் சுற்றுச் சூழல் மாசு அபாயகரமான கட்டத்தை எட்டிவிடும் நிலையில் இருப்பதாக தெரிவந்துள்ளது.
தில்லியில் காலையில் இருந்து நண்பகல் வரையில் 200 முதல் 500 கனமீட்டர் மைக்ரோகிராம் மாசு ஏற்படுவதாக தெரிகிறது. மேலும் கடந்த சில நாட்களாக தில்லியில் வெப்பநிலை அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து தில்லி வானிலை ஆய்வு மையம் கூறும் போது இன்னும் சில நாட்களில் தில்லியில் பனிப் பொழிவு ஏற்படக்கூடும் மேலும் கடந்த 30 தேதி பஞ்சாபில் உள்ள குழாய் தயாரிப்பு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தினால் தில்லியில் புகை மூட்டம் தொடர்ந்து இருந்து வருகிறது.
இன்னும் 10 ஆண்டுகளில் காற்று மாசுபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ள உலகில் உள்ள பெரிய நகரங்களின் பட்டியலில் தில்லி குறிப்பிடத்தக்க இடத்தை எட்டிவிடும் என சமீபத்திய ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.
-http://www.dinamani.com