இஸ்லாமாபாத்: இந்தியாவுடன் போரை விரும்பவில்லை நட்புடன் இருக்கவே பாகிஸ்தான் விரும்புவதாக அந்நாட்டு பிரதமர் நவாஷ் ஷெரீப் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இஸ்லாமாபாத்தில் நேற்று அந்நாட்டு அதிபர் மம்னூன் ஹூசைனும் நவாஷ் ஷெரீப்பும் சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்குப் பின்னர் பிரதமர் நவாஸ் ஷெரீப் தி நேஷன் செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில், இந்தியாவுடன் நட்புடன் இருக்கவே பாகிஸ்தான் விரும்புகிறது. அண்டை நாடுகள் மற்றும் உலக நாடுகளுடன் நட்புறவையே விரும்புகிறோம். அனைத்து அண்டை நாடுகளுடன் இணைந்து வளர்ச்சி அடையவே விரும்புகிறோம் என்று தெரிவித்தார்.
மேலும், இந்தியா- பாகிஸ்தான் இடையேயான பேச்சுவார்த்தையை மீண்டும் துவங்க வேண்டும் என அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் துவங்க பாகிஸ்தான் எப்போதும் தயாராக உள்ளது என்றும் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்புக்கு பிறகு வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் நவாஸ் ஷெரீப்- அதிபர் மம்னூன் ஹுசைனும் உள்நாட்டு விவகாரங்கள் மற்றும் அண்டை நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி நட்புறவை பலப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபகாலமாக இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு இந்திய தரப்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நவாஷ் ஷெரீப் இவ்வாறு கூறியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


























கார்கில் போர் முடிவுக்கு வந்த பின்னர் பாகிஸ்தான் தளபதி ஒருவர மேற்கத்திய பத்திரிக்கையாளர் “பாகிஸ்தான் அணுகுண்டு” பற்றி கேட்ட கேள்விக்கு அளித்த பதில் :
எங்கள் நாட்டிலிருந்து இந்தியாவிற்கு அணுகுண்டை பாய்ச்சினால் பாதிப்பு இந்தியாவுக்கு (வட இந்தியா) 10-15% ஆனால் பாகிஸ்தானுக்கு 80-90% அதாவது பாகிஸ்தானே அழிந்த மாதிரி.
இது நவாஷ் ஷெரீப்புக்கு தெரியாமலா இருக்கும் அதுதான் அடக்கி வாசிக்கிறார்.