வரும் ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி சீனாவைவிட சிறப்பானதாக இருக்கும் என்று உலகப் பொருளாதார அமைப்பு கூறியுள்ளது.
உலக பொருளாதார அமைப்பின் (டபிள்யூ.இ.எஃப்.) தெற்காசிய, இந்தியா பகுதி தலைவர் விராஜ் மேத்தா இது தொடர்பாக இணையதளத்தில் கூறியிருப்பதாவது:
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் முக்கியமானதான இந்தியாவில், இப்போது அரசியல், பொருளாதார ஸ்திரத்தன்மை நிலவுகிறது. எதிர்காலத்தைத் கருத்தில் கொண்டு சர்வதேச பொருளாதாரத்தை நோக்கும்போது, சீனாவின் வளர்ச்சியைவிட இந்தியாவின் வளர்ச்சி சிறப்பானதாக இருக்கும்.
இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீதமாக இருக்கும். 2016-ஆம் ஆண்டு இறுதியில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் சீனாவைவிட அதிகரிக்கும். உலகப் பொருளாதார அமைப்பின் சிறந்த வளர்ச்சியுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 16 இடங்கள் முன்னேறி 55-ஆவது இடத்தில் உள்ளது. சீனா தொடர்ந்து 28-ஆவது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது.
இந்தியாவின் இந்த முன்னேற்றம் எதிர்காலத்தில் மேலும் சிறப்பாக இருக்கும். அடுத்த சில ஆண்டுகளில் பொருளாதாரரீதியாக ஜொலிக்கும் முதல் 5 நாடுகள் பட்டியலில் இந்தியா இடம்
பிடிக்கும்.
-http://www.dinamani.com