வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் ‘தமிழ்நாடு’ தான் முன்னிலை!

tamilnaduசென்னை: இந்தியாவில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் தமிழ்நாடு முதல் இடத்தைப் பிடித்துள்ளதாக அசோசாம் அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 2012-13-ம் ஆண்டில் இந்திய உற்பத்தித் துறையில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கத்தில் இந்தியாவின் பிற மாநிலங்களைக் ஒப்பிடுகையில் தமிழ்நாடு முன்னிலை வகுக்கிறது.

இந்தியாவில் உற்பத்தி மற்றும் தொழிற்துறை சிறந்து விளங்கும் 20 மாநிலங்களில் நடத்தப்பட்ட இவ்ஆய்வில், 2012-13-ம் ஆண்டுக் காலகட்டத்தில் மொத்தம் 1.29 கோடி வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாடு சுமார் 15 சதவீத வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.

தமிழ்நாட்டிற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிரா மாநிலம் மொத்த வேலைவாய்ப்புகளின் 14 சதவீத வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.

அசோசாம் அமைப்பு வெளியிட்டுள்ள இவ்வறிக்கையில் தமிழகத்தில் உற்பத்தித் துறை மிகச் சிறப்பாகச் செயலாற்றுவதாகவும், ஆனால் இன்னமும் சில குறிப்பிட்ட பணிகளுக்கு ஆள் பற்றாக்குறை நிலவுவதாகத் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டின் உற்பத்தி துகறையில், ஜவுளித் துறையில் ஆள் பற்றாக்குறை நிலவுவதால் பீகார், ஒரிசா மாநிலங்களிலிருந்து ஆட்களைப் பணியமர்த்தி வருவதாகத் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஏ.சக்திவேல் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழ்நாட்டில் உணவு உற்பத்தித் துறை, ஜவுளி, ரசாயனம், ரசாயன பொருள் உற்பத்தி ஆகிய துறைகளில் வேலைவாய்ப்பு உருவாக்கும் அளவீடு குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டவில்லை என்றும் அசோசாம் தெரிவித்துள்ளது.

TAGS: