இந்துக்களுக்கு எதிராக அநியாயம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை நவாஸ் செரீப் அறிவிப்பு

nawasபாகிஸ்தானில் இந்துக்களுக்கு எதிராக அநியாயம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நவாஸ் செரீப் உறுதி அளித்துஉள்ளார்.

பாகிஸ்தானில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள் மீது வன்முறை சம்பவங்கள் நடைபெறுவது தொடர்பாக சர்வதேச சமூதாயம் கவலையை வெளிப்படுத்திய நிலையில், கராச்சியில் தீபாவளி கொண்டாட்டத்தில் கலந்துக் கொண்ட பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப் “இந்துக்கள் ஒடுக்கப்பட்டவர்களாகவும், இஸ்லாமியர்கள் அவர்களை ஒடுக்குபவராக இருப்பின் நான் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன். ஒடுக்குபவர்களுக்கு எதிராக நான் உங்களுடன்(இந்துக்களுடன்) நிற்பேன்,” என்று கூறிஉள்ளார்.

சாதி, சமயம் மற்றும் மத விவகாரங்களில் மற்றவர்களின் பொறுப்பற்ற செயலால் பாதிக்கப்பட்டவர்களை பாதுக்காக்க வேண்டியது என்னுடைய கடமை.

“பலவீனமாக மற்றும் பாதிக்கப்படக்கூடிய சமூதாயத்துடன் இணைந்து நிற்கவேண்டும் என்று என்னுடைய மதமானது எனக்கு கற்பித்து உள்ளது. உண்மையில் எல்லா மதமும் பலவீனமாக மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுடன் நிற்கவேண்டும் என்றுதான் சொல்கிறது,” என்றார். இந்து தலைவர்களிடம் பேசிய நவாஸ் செரீப் சிறுபான்மை மக்களை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாக உத்தரவாதம் அளித்தார். பாகிஸ்தானில் உள்ளவர்கள் ஒரே தேசத்தினர், இது நாம் ஒற்றுமையாக இருந்து, ஒருவருக்கு ஒருவர் உதவிசெய்ய வேண்டிய காலம். இஸ்லாமியர்கள் தங்களுடைய மகிழ்ச்சியை இந்துக்களுடன் பகிர்ந்துக் கொள்ளவேண்டும்.

பாகிஸ்தான் அனைவருக்கும் ஒரே தேசம். பாகிஸ்தானியர்கள் அனைவருக்கும் நான் பிரதமர், இதில் சாதி, சமயம் மற்றும் மதத்திற்கு இடமில்லை என்றும் நவாஸ் செரீப் கூறிஉள்ளார்.

பாகிஸ்தானின் தெற்கு சிந்து மாகாணத்தில் உள்ள இந்து பெண்கள் வலுக்கட்டாயமான முறையில் மதம் மாற்றம் செய்யப்படுகின்றனர். இவ்விவகாரம் தொடர்பாக இந்து சமூதாயத்தினர் பாராளுமன்றம் மற்றும் பாராளுமன்றத்திற்கு வெளியேயும் போராடி வருகின்றனர். இந்நிலையில் நவாஸ் செரீப்பின் இக்கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அரசு மற்றும் போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கை இல்லாத காரணத்தினால் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது என்று இந்து தலைவர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்திலும் இந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மையினர் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

கீழே உள்ள செய்தியை படிக்க படத்தின் மீது க்ளிக் செய்யவும்…

-http://www.athirvu.com

TAGS: