பொங்கல் பண்டிகை கொண்டாட்டம், முறைப் பெண்களுடன் திருமணம்: கொரியர்கள் தமிழர்களின் வழிவந்தவர்களா?

korea_001பொங்கல் பண்டிகையை கொண்டாடும் கொரியர்கள், தமிழர்களின் வழிவந்தவர்களா என உலகத் தமிழறிஞர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

காந்திகிராமம் கிராமியப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் சி.சிதம்பரம் நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.

அதில், கொரிய மொழியில் உள்ள பல சொற்கள் தமிழ் சாயலில் அமைந்திருக்கின்றன.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஆய்வரங்கில், கனடாவின் டொரான்டோ நகரை சேர்ந்த ஜூங்நாம் கிம் என்பவர், ‘‘கொரிய மொழியில், பல வார்த்தைகள் தமிழ் சாயலில் இருக்கின்றன’’ என ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மொழியில் இருந்து பிறந்ததுதான் கொரிய மொழி எனவும், இதை அங்குள்ள எழுத்து வடிவங்கள் புலப்படுத்துகின்றன எனவும் கொரிய நாட்டு விஞ்ஞானி கண்ணன் தெரிவித்துள்ளார்.

2,000 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் மக்கள் ரோமானியர்களுடன் வணிகம் செய்து வந்திருந்தனர்.

அப்போது மேற்கில் ரோமானியப் பேரரசும், கிழக்கில் சீனப் பேரரசும் இருந்திருக்கின்றன.

இந்த இரண்டு பேரரசுகளுக்கும் இடையில் தமிழ்ப் பேரரசு இருந்திருக்கிறது. தமிழர்கள் மிகச் சிறந்த கடலோடிகளாக இருந்துள்ளனர்.

பாண்டிய நாட்டின் மீன் இலச்சினைகள் கொரியாவில் பயன்படுத்தப்படுகின்றன.

சொல்லா எனும் மாவட்டம் கொரியாவில் உள்ளது. இது சோழா எனும் பெயரின் திரிந்த சொல்லாகவே கருத தோன்றுகிறது.

இதேபோல், உணவு முறைகளிலும் கொரியாவுக்கும் தமிழுக்கும் தொடர்புள்ளது. தோசை, கொழுக்கட்டை உள்ளிட்ட தமிழர்களின் உணவுகள் அங்கு பிரதான உணவுகளாக உள்ளன.

தமிழர்களின் பழக்கவழக்கங்கள் அங்கு ஏராளமாக பயன்படுத்தப்படுகின்றன.

கொரியாவில் அத்தை, மாமன், தாய்மாமன் முறைப் பெண்களைத்தான் மணந்துகொள்கிறார்கள்.

தமிழர் பண்டிகையான பொங்கலை பெரும் விழாவாக அங்கு கொண்டாடுகிறார்கள்.

1960-கள் வரை அவர்களின் வீடுகள் தமிழர்களின் குடிசைகளைப் போலவே இருந்தன.

பெறும்போஇன்றும் கொரியாவில் பெற்றோரை அம்மா, அப்பா என்றே அழைக்கிறார்கள்.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, தமிழர்களின் வழிவந்தவர்களாகவே கொரியர்கள் கருதப்படுகின்றனர். மேலும் இது பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

-http://www.newindianews.com

TAGS: