திருநங்கைகளுக்கு தனி கொள்கை ; வழிகாட்டுகிறது கேரளா

thirunangkaiதிருவனந்தபுரம் : திருநங்கைகளுக்கு தனி கொள்கை வகுத்ததன் மூலம், நாட்டிலேயே மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாகி உள்ளது கேரளா. திருநங்கைகளின் நலனுக்காக ஒவ்வொரு மாநிலமும் ஒரு திட்டம் வைத்திருக்கின்றன.

ஆனால் எங்கும் அவர்களுக்கு என தனி கொள்கை இல்லை. இப்போது முதன்முதலாக கேரளா, அக்கொள்கையை அறிவித்துள்ளது.கேரள சமூ நீதி துறை சார்பில் கொண்டு வரப்பட்டுள்ள இக்கொள்கையின்படி, அனைத்து வகையான பொருந்தும். சுப்ரீம் அறிவுறுத்தலின்படி, ஒவ்வொரு திருநங்கையும் தன்னை ஆணா, பெண்ணா இல்லை திருநங்கை தானா என வகைப்படுத்திக்கொள்ளலாம்.

அனைத்து பொருளாதார. சமூக விஷயங்களிலும் மற்றவர்களைப் போல, இவர்களுக்கும் சம உரிமை தரப்பட வேண்டும். வன்முறையின்றி, அனைத்து துறைகளிலும் இவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்.

திருச்சூர் அருகே உள்ள விய்யூர் சிறைச்சாலையில், திருநங்கைகளுக்கு தனி இடம் ஒதுக்கப்படும். சட்டத்தில் சம உரிமை தரப்படும். கேரளாவில் 30 ஆயிரம் திருநங்கைகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.

-http://www.dinamalar.com

TAGS: