கிறிஸ்தவர் மதம் மாறாமல் இந்து கோவிலில் திருமணம் செய்வது சட்டப்படி செல்லாது: உயர்நீதிமன்றம் அதிரடி

marriage_001கலப்புத் திருமணம் செய்யும்போது கிறிஸ்தவர் ஒருவர் மதம் மாறாமல் இந்து பெண்ணை கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டது சட்டப்படி செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பளித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆட்கொணர்வு மனு ஒன்று நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அந்த மனுவை தாக்கல் செய்த பெண்மணி, தனது மகள் காதல் திருமணம் செய்து கொண்டதாகவும், தன்னிடம் அவரை ஒப்படைக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

பழனி முருகன் கோவிலில் வைத்து திருமணம் செய்த அந்த கலப்புத் தம்பதிகளில் பெண் இந்து மதத்தைச் சேர்ந்தவர். ஆண் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்.

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் அப்பெண்ணை ஆஜர்படுத்துமாறு பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து அப்பெண் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டதை அடுத்து மனுவை விசாரித்த நீதிபதிகள், கிறிஸ்தவ ஆண் மதம் மாறாத பட்சத்தில் இந்து கோவிலில் நடைபெற்ற திருமணம் எப்படி முறைப்படி செல்லும் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்நிலையில் அந்த பெண் திருமணம் செய்து கொண்ட ஆணுடனே செல்வதாக கூறியதால், சட்டப்படி இந்த திருமணம் செல்லாத நிலையிலும், பெண் மேஜர் என்பதால் அவர் விருப்பப்படி யாருடன் வேண்டுமானாலும் செல்லலாம் என்று கூறியுள்ளனர்.

-http://www.newindianews.com

TAGS: