ஏப்ரல் 2016 முதல் மது விற்பனைக்கு முற்றிலும் தடை: முதல்வர் அதிரடி அறிவிப்பு

nitish_001ஏப்ரல் 2016 முதல் மது விற்பனை முற்றிலுமாக தடை செய்யப்படுவதாக பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.

பீஹார் சட்டசபை தேர்தலின் போது நிதிஷ் குமார், தான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மாநிலத்தில் முழுமையான மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று பெண்களுக்கு வாக்குறுதி அளித்துள்ளார்.

இதையடுத்து அவர் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களை பிடித்து வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ளார்.

இந்நிலையில், பிஹார் முதல்வர் நிதிஷ் குமாரின் அமைச்சரவையில், கலால் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சராக உள்ள அப்துல் ஜலில் மஸ்தான் கூறுகையில், இன்னும் 6 மாதங்களில் மாநிலத்தில் மது விற்பனை முற்றிலுமாக தடை செய்யப்படும் என அறிவித்துள்ளார்.

மஸ்தான் மேலும் கூறுகையில், மதுவிலக்கை முற்றிலுமாக அமல்படுத்த வேண்டுமென தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த பெண்கள் பலர் போராடியதாக குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் பீஹாரில் வரும் ஏப்ரல் 1ம் திகதி முதல் மது விற்பனை முற்றிலுமாக தடை செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

-http://www.newindianews.com

TAGS: