சத்தீஷ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய மாவோயிஸ்டுகள் தேடுதல் வேட்டையின் போது, சிறுமி உள்பட பல பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர்.
சத்தீஷ்கர் மாநிலம் பிஜபூர் மாவட்டத்தில் உள்ள 5 கிராமங்களில் பாதுகாப்பு படையினர் கடந்த அக்டோபர் 19ம் திகதி முதல் 24ம் திகதி வரை மாவோயிஸ்டுகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
பாதுகாப்பு படையினர் நடத்திய வேட்டையில் அந்த கிராமங்களில் உள்ள சிறுமி மற்றும் கர்ப்பிணி பெண் உள்பட பல பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ள நிலையில், விசாரணை குழு அமைக்கபட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
சர்வ ஆதிவாசி சமாஜ், ஆதிவாசி சிவில் சமூகம், அந்த பகுதி எம் எலேஎ கொண்ட குழு என 3 வெவ்வேறு குழுக்கள் உண்மை கண்டறியும் விசாரணை நடத்தி வருகின்றன.
உண்மை கண்டறியும் குழுவிடம் 15க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கள் ஆடைகளை களைந்து பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும், மிளகாய் பொடியை மர்ம உறுப்புகளில் தூவி கொடுமை செய்ததாகவும் கூறியுள்ளனர்.
மேலும், அந்த கிராமத்தைச் சேர்ந்த பலர் தங்களின் வீடுகளில் இருந்த ரூ.500 முதல் ரூ.27 ஆயிரம் பணம் வரை கொள்ளைபோய் உள்ளதாக கூறி உள்ளனர்.
இந்த சம்பவங்கள் நடந்து 2 மாதங்கள் ஆகியும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-http://www.newindianews.com