அனைத்து சாதியினரும் அர்ச்சகராக முடியாது: தமிழக அரசின் சட்டத்தை ரத்து செய்த உச்ச நீதிமன்றம்

supreme_court_001ஆகம விதிகளுக்கு உட்பட்டுதான் கோயில்களில் அர்ச்சகர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தமிழக அரசின் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசின் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தை எதிர்த்து மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் சிவாச்சாரியார்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை கடந்த மே மாதம் முடிவடைந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் வழக்கின் தீர்ப்பை தள்ளிவைத்தது.

இந்நிலையில், தற்போது இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த தீர்ப்பில், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற தமிழக அரசின் சட்டத்தை ரத்து செய்துள்ளது.

மேலும், ஆகம விதிக்கு உட்பட்டு அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது.

இந்த தீர்ப்பு தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

-http://www.newindianews.com

TAGS: