“அர்ச்சகர் வழக்கின் தீர்ப்பு மேலதிக வழக்குகளுக்கே வழிசெய்யும்”

supreme_court_001பயிற்சி பெற்ற அனைத்து சாதியினரும் அர்ச்சகராக்கும் தமிழக அரசின் சட்டத்திற்கு எதிரான வழக்குகளில் இந்திய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு முன்னுக்குப்பின் முரணாக இருப்பதால் மேலதிக வழக்குகளுக்கு இது வழிவகுக்கும் என்கிறார் சட்டவிவகார செய்தியாளர் ஜெ வெங்கடேசன்.

ஒருபக்கம் ஆகமவிதிகளின்படி குறிப்பிட்ட சில பிரிவினர் மட்டுமே அர்ச்சகர்களாக நியமிப்பது இந்திய அரசியல் சட்டம் வலியுறுத்தும் சட்டத்தின் கீழ் அனைவரும் சமம் என்கிற சமத்துவத்துக்கு எதிரானதல்ல என்றும் கூறிவிட்டு, பயிற்சி பெற்ற அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்கிற சட்டத்தையும் நிராகரிக்காமல் அப்படியே தொடர அனுமதித்திருக்கும் இந்த தீர்ப்பு பலவிதமான குழப்பங்களுக்கு இட்டுச்செல்லும் என்கிறார் அவர்.

எனவே இந்தத் தீர்ப்பு தொடர்பில் சிலபல விளக்கங்களை இந்திய உச்சநீதிமன்றத்திடம் கோரவேண்டிய தேவை இருப்பதாகவும் அவர் கருதுகிறார்.

தமிழக அரசோ அல்லது தமிழக அரசின் அர்ச்சகர் பயிற்சி பெற்று வேலையின்றி பாதிக்கப்பட்டிருக்கும் அர்ச்சகர்களோ உச்சநீதிமன்றத்திடம் இந்த தீர்ப்பு குறித்து மேலதிக விளக்கங்கள் கோரலாம் என்றும் வெங்கடேசன் கருத்து தெரிவித்தார். -BBC

TAGS: