சென்னை வெள்ளத்தால் வீடின்றி வீதிகளில் உறங்கும் மக்கள்… குடியிருப்புகள் கேட்டு ஆர்ப்பாட்டம்

koovakamசென்னை: சென்னையில் கொட்டித்தீர்த்த பெருமழை வெள்ளத்தால் பல ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்துள்ளனர். முகாம்களில் இருந்தும் வெளியேற்றப்பட்டுள்ளதால் வீதிகளில் தங்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

பனியில் பச்சிளம் குழந்தைகளுடன் சாலையோரங்களில் படுத்து உறங்குவதால் பலவித இன்னல்களுக்கும் ஆளாகியுள்ளனர். மழையினால் வீடு மற்றும் உடமைகளை இழந்த சைதாப்பேட்டையை சேர்ந்த பொதுமக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சமீபத்தில் கொட்டிய மழையால், அடையாறு, கூவம், பக்கிங்ஹாம் கால்வாய் ஆகியவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், சென்னை நகரம் வெள்ளத்தில் மூழ்கி தத்தளித்தது.

அதிகப்படியான மழைப்பொழிவு மட்டுமின்றி, நீர்வழித் தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளே, இதற்கு காரணம் என தெரியவந்தது. அடையாறு, கூவம் ஆற்றங்கரையில் வசிப்பவர்களுக்கு குடிசை மாற்றுவாரியத்தால் கட்டப்பட்டுள்ள வீடுகள் உடனடியாக வழங்கப்படும் என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

அவர்களுக்கு வீடுகளை ஒதுக்கீடு செய்வதற்காக தற்போது கணக்கெடுப்பு பணி நடப்பதாக வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் சென்னையில் நகர்பகுதியை விட்டு புறநகர் பகுதிக்கு செல்ல மக்கள் மறுத்து வருகின்றனர்.

tamil.oneindia.com

TAGS: