சென்னை: சிம்பு மன்னிப்பு கேட்டால் பீப் பாடலை மன்னித்து, மறந்து விடலாம் என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தெரிவித்திருக்கிறார். தமிழ்நாட்டில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய பீப் பாடல் வழக்கில் பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இன்னும் முற்றுப்புள்ளி பெறாத இந்த விவகாரம் குறித்து நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமான் கூறும்போது “பீப் பாடல் தவறானது. இதற்காக தமிழக மக்களிடம் சிம்பு மன்னிப்பு கேட்க வேண்டும். இந்த விஷயத்தில் நடிகர் சிம்பு மன்னிப்பு கேட்டால், அவரை மன்னித்து இந்த பீப் பாடலை மறந்து விடலாம்” என்று தனது கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.
முன்னதாக தமிழக மக்களை மழை, வெள்ள பாதிப்புகளில் இருந்து இந்த விவகாரம் திசை திருப்புகிறதா? என்ற கேள்விக்கு “இந்த ஒரு பாட்டு மக்களை திசை திருப்பும் என்று நான் நினைக்கவில்லை. இலங்கையில் நமது மக்களின் இனப்படுகொலையின் போது பதறாத மக்கள், இந்த ஒரு பாடலுக்கு இவ்வளவு பதறுகிறார்களே என்பதை நினைக்கும் போது சற்று வேதனையாக உள்ளது.
இந்தப் பாடலை கேட்காவிட்டால் நாளடைவில் மறைந்து விடும். இதனை இவ்வளவு பெரிய விஷயமாக எடுத்துக் கொண்டு பேச வேண்டியதில்லை. ஆனால் ஒரு பாடல் இவ்வளவு பெரிய செயலை திசை திருப்பி விடும் என்று நான் நினைக்கவில்லை” என்று சீமான் கருத்துத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


























மன்னிப்போம் ……… மறப்போம் ……..
சிம்பு சாதி மக்களும் ரசிகர்களும் பொங்கி எழுவார்களே கலவரம் தீயாய் பற்றி எரியுமே,
நாராயண நாராயண.
SEEMAAN ,மறப்போம் மன்னிப்போம் ,,அதுசரி ,,ஒரு பொம்பள கேஸ்ல நீ மாட்டிகிடேஎ ,அதை மனதி வைத்து தான் சொல்லுரேவா மறப்போம் மன்னிப்போம் என்று ?? தமிழ் நாட்டிலே வெள்ளம் வரும் பொது கனாபோயிட்ட நீ ,இப்ப சிம்புக்கு வக்காலத்து வங்க வந்திட்டியா தம்பி ??
தமிழ் நாட்டு மழை வெள்ளத்தில்
அடித்து செல்லபட்டது
சாதி மத உணர்வு
அதை ஊடகங்கள் வழி
நாத்து நட்டு முழைக்க வைக்குது
சில பிணம் தின்னும் கழுகுகள்.
கூறு கேட்ட mohan அவர்களே ,சென்னை வெள்ள பேரிடரின் பொது ,அங்குள்ள மக்களுக்கு தன் தோழர்களுடன் நேரடியாக உதவ சென்றத படிக்க வில்லையா ? .தமிழன் நல்லது செஞ்சாலும் குறை ,செய்யா விட்டாலும் குறை .மோகன் நீங்கள் உண்மையில் பிறப்பால் தமிழனா ? அல்லது தெலுங்கு ,மலையாளம் !!! எதாவது ? உண்மையான தமிழனுக்கு பிறந்தவன் உங்களை போல் இன்னொரு தமிழனை இழிவாக பேச மாட்டான்