உலகளவில் இந்தியாவில் சிகரெட் பிடிக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: அதிர்ச்சி தகவல்

smoking_001இந்தியாவில் சிகரெட் நுகர்வு குறித்த தகவல் அறிக்கை லோக்சபாவில் சமர்பிக்கப்பட்டுள்ளது.

2014-15ம் ஆண்டுக்கான மத்திய அரசின் அறிக்கையில், இந்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

லோக்சபாவில் சமர்பிக்கப்பட்ட அந்த அறிக்கையில், 2014-15 ஆண்டுகளில் சுமார் 93.2 பில்லியன் சிகரெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இது 2012-13 ஆண்டுகளில் விற்பனை செய்யப்பட்டதை விட 10 பில்லியன் குறைவு.

மேலும், சிகரெட் உற்பத்தி 117 பில்லியனில் இருந்து 105.3 பில்லியனாக வீழ்ச்சியடைந்துள்ளது.

187 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், இந்தியாவில் சிகரெட் பிடிக்கும் பெண்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 1980ம் ஆண்டில் 53 லட்சமாக இருந்த சிகரெட் பிடிக்கும் பெண்களின் எண்ணிக்கை 2012-ல் 127 லட்சமாக அதாவது உயர்ந்துள்ளது.

32 ஆண்டுகளில் இரண்டு மடங்கிற்கு மேல் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2009-10 ஆண்டில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மேற்கொண்ட ஆய்வில் 24 சதவீதம் ஆண்களும், 17 சதவீதம் பெண்களும் புகையில்லா குட்கா, ஹான்ஸ் போன்ற புகையிலை பொருட்களை பயன்படுத்துவது தெரியவந்துள்ளது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-http://www.newindianews.com

TAGS: