பஞ்சாப் தாக்குதலில் வீரமரணம் அடைந்த காமென்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற வீரர்

singh_died_001பதன்கோட்டில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், காமன்வெல்த் போட்டிகளில் துப்பாக்கி சுடுதலில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்கள் வென்ற பாதுகாப்பு படை வீரர் வீரமரணம் அடைந்துள்ளார்.

பதன்கோட் தாக்குதலில் பலியான சுபேதார் பதேஹ் சிங் (51) 1995ம் ஆண்டு டெல்லியில் நடந்த முதல் காமன்வெல்த் துப்பாக்கிச்சுடும் போட்டிகளில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்றவர்.

அவரது மறைவுக்கு இந்திய தேசிய துப்பாக்கி சங்கம் தனது இரங்கலை தெரிவித்துள்ளது.

பதேஹ் சிங் கடந்த 2009ம் ஆண்டு டோக்ரா ரெஜிமென்ட்டில் சுபேதார் மேஜராக ஓய்வு பெற்றார்.

மேலும், ஓய்வுக்கு பிறகு அவர் தேசிய பாதுகாப்பு படையில் சுபேதாராக பணியாற்றி வந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தான் அவர் பதன்கோட்டிற்கு மாற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய தேசிய துப்பாக்கி சங்கத்தின் தலைவர் ரனிந்தர் சிங் பதேஹ் சிங்கின் வீரமரணம் குறித்து கூறுகையில், பதேஹ் சிங் தாய்நாட்டிற்காக தனது உயிரை தியாகம் செய்துள்ளார். அவரது ஆத்மா சாந்தியடையட்டும் என தெரிவித்துள்ளார்.

-http://www.newindianews.com

TAGS: