சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் புதுமுக முதல்வர் வேட்பாளர்களில் நடிகர்கள் ரஜினி, விஜய்,அஜீத் விட ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்திற்கு மக்கள் ஆதரவு அதிகம் கிடைத்துள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் முதல்வர் வேட்பாளர்களுக்குப் பஞ்சமில்லை. அதிமுகவில் ஜெயலலிதா, திமுகவில் கருணாநிதி, ஸ்டாலின், தேமுதிகவில் விஜயகாந்த், பாமகவில் அன்புமணி ராமதாஸ், மக்கள் நலக்கூட்டணியில் வைகோ என பல முதல்வர் வேட்பாளர்கள் இருக்கின்றனர். சினிமா நடிகர்களில் சிலருக்கும் முதல்வராகவேண்டும் என்று ஆசையிருக்கிறது. நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானுக்கும் முதல்வர் ஆசையுண்டு.
எத்தனையோ முதல்வர் வேட்பாளர்கள் களத்தில் இருக்க ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்தை முதல்வராக ஒரு குழு முழு முனைப்போடு செயல்பட்டு வருகிறது.
சட்டசபை தேர்தல் தொடர்பாக, லயோலா கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்களுடன், நியூஸ் 7 தமிழ் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது. தமிழக முதல்வர் வேட்பாளராக யாருக்கு ஆதரவு என்பது பற்றி நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் பல புதுமுகங்களுக்கும் பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம், நடிகர் விஜய் உள்ளிட்டோருக்கு கருத்துக்கணிப்பில் பொதுமக்கள் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். தமிழகத்தில் அதிமுக, திமுக ஆகிய இருகட்சிகளும் தனித்துப் போட்டியிட ஆதரவு பெருகியுள்ளது.
முதல்வர் வேட்பாளராக, ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்திற்கு 4 சதவீதம் பேரும், நடிகர் விஜயக்கு 2.7 சதவீதம் பேரும் கருத்துக் கணிப்பில் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அதேபோல், நடிகர் ரஜினிக்கு 1.5 சதவீதம் பேரும், நடிகர் அஜித்திற்கு 0.2 சதவீதம் பேரும் ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர். பிரபல சமூக சேவகர் டிராபிக் ராமசாமிக்கு 0.8 சதவீதம் பேர் ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.
36.54 சதவீதம் பேர் அதிமுக தனித்துப் போட்டியிட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர். 32.90 சதவீதம் பேர் திமுக தனித்துப் போட்டியிட வேண்டுமென விருப்பம் தெரிவித்துள்ளது கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
-http://tamil.oneindia.com
மொத்ததிலே அதிமுக திமுக இந்த இரண்டு கட்சிகளும் மாறி மாறி ஆட்சிக்கு வந்து மக்களை கொள்ளை அடிக்க காத்துக்கிடக்கிறது. இது தமிழக மக்களின் சிந்தனை அற்ற செயல் .சாபமும் கூட
மலேசியாவில் இருந்து நான் திரு. சகாயம் ஐ.ஏ.எஸ் அதிகாரியை முதல்வர் வேட்பாளர் வரவேண்டும் என நினைக்கிறன். அவரின் பேட்டியை தொலைகாட்சியில் பார்த்தேன். சுத்தமான மனிதர் அவர் வரவேண்டும் முதல்வராக தமிழ் நாட்டுக்கு. சினிமாகரன்களே தமிழ் நாட்டை குட்டி சுவரக்கி விட்டன்கள். நல்ல படித்த ஒரு தமிழன் வரவேண்டும். மற்ற மற்ற மாநிலங்களில் அந்த அந்த இனம் தாலைவர்கள் இருப்பார்கள் அனல் தமிழ் நாட்டில் ஒரு தமிழன் இல்லை ஒரு சபாகேடு. ஒரு சில நல்ல தமிழ் தலைவர்கள் இருந்தார்கள் காமராஜ், கங்கன் போன்றோர். இப்போ கேள்வி? திரு சிமன் போன்றோர் வர வேண்டும். அனல் தமிழன் எப்போது ஒரு நடிகனுக்கு கட்அவுட் வைது பால் உட்ருவதை நிருதுகிரனோ அப்போதான் தமிழ் நாடு உருப்படும்.
பேட்டியெல்லாம் நல்லா கொடுக்கலாம்
அனால் ஒரு பருப்பும் வேகாது
சகாயம் வந்தால் மக்களுக்கு சகாயம் கிடைக்காது.
அவன் குடும்பதுகுத்தான் சகாயம் செய்வான்