ஜல்லிக்கட்டு தடை குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து: தடையை எதிர்த்து பலர் போராட்டம்

protest_jallikatu_001தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது குறித்து தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

மு.க. ஸ்டாலின், திமுக: ஜல்லிக்கட்டு தடையை நீக்க மத்திய அரசு சட்ட ரீதியாக அணுக வேண்டும்.

தமிழிசை சௌந்தர்ராஜன், பாஜக: பொங்கலுக்குள் ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க சட்ட ரீதியாக முயற்சிப்போம்.

ஜி. ராமகிருஷணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி: தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த தடை விதித்தது ஏற்புடையதல்ல. தடையை நீக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் முயலவேண்டும்.

திருமாவளவன், விடுதலை சிறுத்தைகள்: ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசு போதிய ஆர்வம் காட்டவில்லை. ஜல்லிக்கட்டில் காலைகள் வதைக்கப்படுவதாக கூறுவதை ஏற்க முடியாது.

ஜி.கே. வாசன், தமிழ் மாநில காங்கிரஸ்: ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. அனைத்து சட்ட நுணுக்கங்களையும் ஆய்வு செய்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அன்புமணி ராமதாஸ், பா.ம.க: ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தடையை எதிர்த்து மத்திய அரசு நீதிமன்றத்தை நாடி நடவடிக்கௌ எடுக்க வேண்டும். அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி பிரதமரை முதல்வர் நேரில் சந்திக்க வேண்டும்.

நடிகை குஷ்பு, காங்கிரஸ்: ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது வருத்தமளிக்கிறது.

இந்நிலையில், ஜல்லிக்கட்டு மீதான உச்ச நீதிமன்ற தடையை அடுத்து அலங்காநல்லூர், பாலமேட்டில் பொதுமக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

மாடுபிடி வீரர்கள், மாடு வளர்ப்பவர்கள், ஜல்லிக்கட்டு பேரவையினர், வியாபரிகள், பொதுமக்கள் என பலரும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இதையடுத்து அங்கு பொலிசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். போராட்டத்தில் கலந்து கொண்ட நபர் ஒருவர் தீக்குளிக்க முயன்ற போது அவரை பொலிசார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

மேலும், அலங்காநல்லூரில் விழா நடத்தும் கமிட்டியை சேர்ந்தவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

-http://www.newindianews.com

TAGS: