பில்லி, சூனியம் தொடர்பான வழக்குகளை விசாரிக்க ஜார்கண்ட்டில் 5 சிறப்பு நீதிமன்றங்கள்

witch_001ஜார்கண்ட் மாநிலத்தில் மூடநம்பிக்கை தொடர்பான தாக்குதல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பழங்குடியினர் அதிகமாக வசிக்கும் ஜார்கண்ட் மாநிலத்தில், மந்திரவாதி என சந்தேகப்படும் நபர்களையும், அவர்களின் குடும்பத்தையும், ஒட்டுமொத்தமாக அடித்துக் கொல்வதும், வீட்டோடு தீ வைத்து எரித்துக் கொல்வதும் அடிக்கடி நடந்துவருகிறது.

பல மாவட்ட நீதிமன்றங்களில் ஏற்கனவே கொலை, கொள்ளை தொடர்பான பல்வேறு குற்றவியல் வழக்குகள் நிலுவையில் இருப்பதால், மூடநம்பிக்கை சார்ந்த தாக்குதல்களும், கொலைகளும் தாராளமாக அரங்கேறி வருகின்றன.

இந்நிலையில் தான் சமூக ஆர்வலர்கள் இத்தகைய வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றங்கள் அமைக்க கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தற்போது அந்த கோரிக்கைகளை ஏற்கப்பட்டுள்ளது. எனவே, இங்குள்ள 5 மாவட்டங்களில் மூடநம்பிக்கை தொடர்பான வழக்குகளை விசாரிக்க சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் அமைக்க முதல்வர் ரகுபர் தாஸ் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

-http://www.newindianews.com

TAGS: