உலகின் முதல் விமானத்தை கண்டுபிடித்தது இந்தியரா? மறைக்கப்பட்ட வரலாறு

talpade_aero_001அமெரிக்காவை சேர்ந்த ஒர்வில்லி ரைட்(orville Wright) மற்றும் வில்பர் ரைட் (Wilbur wright) சகோதரர்கள் 1903 ஆம் ஆண்டு உலகின் முதல் விமானத்தை இயக்கி காட்டியபோது அவர்களை உலகமே வியந்துபார்த்தது.

ஆனால் இவர்கள் விமானத்தை கண்டுபிடிப்பதற்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவை சேர்ந்த ஷிவ்கர் பாபுஹி தால்பேட் என்பவர் தனது மனைவியுடன் சேர்ந்து மும்பை சவுபதி கடற்கறையில் ஆளில்லா விமானத்தை பறக்கவிட்டு அனைத்து மக்களையும் அதிசயிக்க வைத்தார்.

தால்பேட் பம்பாயின் சித்ரா பஜார் என்னும் இடத்தில் பிறந்தவர். சிறுவயதிலேயே விமானம் தொடர்பான குறிப்புகளை பிரமிப்புடன் படிக்கதொடங்கியவர், பின்னர் அதிலேயே தன்னை ஈடுபடுத்தி கொண்டார்.

இதற்காக தாமஸ் ஆல்வா எடிசன், ஹைரம் மேக்ஸம்(இயந்திர துப்பாக்கியை கண்டுபிடித்தவர்) ஆகியொர் விமானம் தொடர்பாக செய்த ஆராய்ச்சிகளின் குறிப்புகளை தேடி தேடி படித்தார்.

இந்நிலையில் சுப்பராய சாஸ்த்ரி பண்டிதர் என்பவரை சந்தித்த பின் அவரது வாழ்க்கையின் திசை மாறத்தொடங்கியது. பரத்வாஜ மகரிஷி ரிக் வேதத்தில் குறிப்பிட்டுள்ள விமானம் தொடர்பான ஸ்லோகங்கள் குறித்து சுப்பராய சாஸ்த்ரி தால்பேட்டுக்கு விளக்கியுள்ளார்.

இதையடுத்து வேதங்களில் உள்ள குறிப்புகளை தெரிந்துகொள்வதற்காக அவர் சமஸ்கிருதத்தை முழுமையாக கற்றறிந்தார். பின்னர் வேதங்களில் குறிப்பிட்டுள்ள குறிப்புகளை வைத்து விமானத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கினார்.

இந்த ஆராய்ச்சுக்கு பரோடா மன்னர் சாயாஜிஷிண்டே நிதி அளித்து உதவினார். இறுதியாக மாருத்சகா என்ற தனது விமானத்தை தால்பேட் உருவாக்கினர்.

பின்னர் இதனை பறக்கவிட்டு சோதித்து பார்க்க முடிவு செய்தார். அதற்கு முன்னால் இந்த விமானத்தின் முக்கிய சிறப்பு ஒன்றை நான் தெரிந்துகொள்ள வேண்டும்.

இந்த விமானத்தின் இஞ்சின் தான் அது. ரைட் சகோதரர்கள் கண்டுபிடித்த விமானத்தின் இஞ்சினை விட சிறந்ததாக கூறப்படுகிறது.

அதாவது, பாதரசத்தை எரி பொருளாகக் கொண்ட MERCURY VORTEX ENGINE என்னும் இஞ்சின் அமைப்பை தால்பேட் பயன்படுத்தினார்.

பாதரசத்தை எரிபொருளாக பயன்படுத்தும் ஆராய்ச்சியில் அமெரிக்காவின் நாசாவே இன்னும் முழு வெற்றி அடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்னர் இதனை தால்பேட் நிகழ்த்தி காட்டியுள்ளார்.

1895ஆம் ஆண்டு பரோடா மன்னர் சாயாஜிஷிண்டே, நீதிபதிகள் அறிஞர்கள் மற்றும் பாமர மக்கள் முன்னால் தனது ஆளில்லா விமானத்தை பறக்கவைத்து காட்டினார்.

அங்கிருந்தவர்கள் அனைவரும் ஒரு கணம் ஆச்சரியத்தில் உறைந்து போனார்கள் என்றே கூறலாம். ரைட் சகோதரர்களின் விமானம் 100 அடி உயரம் பறந்து 20 நொடிகளில் கீழே விழுந்தது.

ஆனால் தால்பேட்டின் விமானமோ 1500 அடிகள் பறந்து 15 நிமிடங்களுக்கு பிறகு கிழே விழுந்தது.

இந்த தகவலை அறிந்த ஆங்கிலேய அரசு உடனடியாக தால்பேட்டை கைது செய்தது. மேலும் அவருக்கு நிதி உதவி செய்த மன்னரையும் எச்சரித்தது.

பின்னர் சிறையில் இருந்து வெளிவந்த தால்பேட் தனது ஆராய்ச்சியை தொடராமலேயே இறந்துபோனார். அவருடன் அவரது கனவும் இறந்துபோனாது.

ஒரு வேளை அவரது உழைப்பு அங்கீகரிக்கப்பட்டிருந்தால் சரித்திரம் மாற்றி எழுதப்பட்டிருக்கும்.

-http://www.newindianews.com

TAGS: