செம்மொழியான தமிழ் எங்கும் ஆட்சிமொழியாக இல்லை! உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் தலைவர்

thurairasa_001செம்மொழியான தமிழ் மொழி எந்த நாட்டிலும் அரசகரும மொழியாக இல்லை என உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் அகில உலக தலைவர் வி.சு. துரைராஜா தெரிவித்தார்.

பாண்டிச்சேரியில் நடைபெற்று வரும் உலக தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் பன்னாட்டு சிறப்பு மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.

ஈழத்தில் தமிழ் மொழி அரசகரும மொழியாக இருக்கின்றது என்று கூறப்பட்டாலும் அங்கு அது சரியாக அமுலில் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

உலகில் ஆறு மொழிகள் மாத்திரமே செம்மொழியாக இருப்பதாகவும் அவற்றில் தமிழ் மொழியும் அடங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

-http://www.tamilwin.com

TAGS: