காரைக்குடி, திருவண்ணாமலையில் தடையை மீறி ஜல்லிக்கட்டு!!

jallikattuகாரைக்குடி/ திருவண்ணாமலை: காரைக்குடி அருகே கோவிலுரில் நீதிமன்ற தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது. போலீஸ் காவலையும் மீறி காளைகளை உரிமையாளர்கள் அவிழ்த்துவிட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் மேல்சோழங்குப்பம், வீரலூர் ஆகிய பகுதிகளில் தடையை மீறி ஜல்லிக்கட்டு விழா நடைபெற்றது. தடையை மீறி மூன்று கிராமங்களில் இந்த ஜல்லிக்கட்டு விழா நடத்திய, 20 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கோவிலூரில், பொதுமக்கள் திடீரென காளைகள் அவிழ்த்துவிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அங்கு தடையை மீறி மஞ்சுவிரட்டு நடத்தப்போவதாக கிடைத்த தகவலை அடுத்து காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். அப்போது ஒரு அமைப்பினர், சரக்கு வாகனத்தில் காளைகளை கொண்டுவந்து அவிழ்த்துவிட்டனர். முன்னதாக காளைகளை வாகனத்தில் இருந்து இறக்க விடாமல் தடுத்த போலீசாருக்கும், அந்த அமைப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதே போன்று திருவண்ணாமலை மாவட்டம் மேல்சோழங்குப்பம், வீரலூர் ஆகிய பகுதிகளில் தடையை மீறி காளைகள் விடும் விழா நடைபெற்றது. அனுமதியின்றி நடந்த காளைகள் விடும் விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சு விரட்டு விழா நடத்த, தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், 65 கிராம மக்கள், மஞ்சு விரட்டு விழாவை நடத்தப்போவதாக அறிவித்தனர்.

இந்நிலையில், தடையை மீறி, மீறி கலசப்பாக்கம் அருகே மேல்சோழங்குப்பம், வீரளூர், மற்றும் கீழ்பாலூர் ஆகிய கிராமத்தில், நேற்று முன்தினம் மாலை மஞ்சு விரட்டு விழா நடந்தது. இதுதொடர்பாக, அக்கிராமத்தை சேர்ந்த, 20 பேர் மீது கடலாடி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

இருந்தும், இன்றும், நாளையும் தொடர்ந்து மஞ்சு விரட்டு விழா நடத்த மக்கள் முடிவு செய்துள்ளனர். இதேபோல கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரிலும் தடையை மீறி எருது விடும் விழாவை மக்கள் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

tamil.oneindia.com

TAGS: