அணுஆயுத போர் வந்தால் இந்தியா, பாகிஸ்தானை சமாளிப்பது கடினம்: அமெரிக்கா கவலை!

pak-mesyleபாகிஸ்தான் மீது இந்தியா ராணுவ நடவடிக்கை எடுத்தால், இந்தியாவை குறி வைத்து 130 அணு ஆயுதம் தாங்கிய ஏவுகணைகளை செலுத்த பாகிஸ்தானிடம் வல்லமை இருப்பதாக அமெரிக்க காங்கிரசின் ஒரு அங்கமான சி.ஆர்.எஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து அமெரிக்க நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, தற்போது பாகிஸ்தானிடம் 120 முதல் 130 அணு ஆயுதங்கள் உள்ளனவாம். அதற்கு மேலாகவும் இருக்கலாம். இன்னும் கூட பாகிஸ்தான் அணு ஆயுதங்களை தயாரித்து வருகிறது.

இராணுவ பலம் மிகுந்த இந்தியாவை, அணு ஆயுதம் மூலமாகத்தான் கட்டுப்படுத்த முடியுமென்பது பாகிஸ்தானின் திடமான நம்பிக்கை.

அதனால்தான் அணு ஆயுதங்கள் உற்பத்தியை, பாகிஸ்தான் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகிறது.

அத்துடன் அணுபிளவு ஆயுதங்களை தயாரிப்பதிலும் பாகிஸ்தான் கூடுதல் ஆர்வம் காட்டி வருவதும் சர்வதேச நாடுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அணு ஆயுதங்கள் தொடர்பாக, சர்வதேச நாடுகளுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகளை பாகிஸ்தான் எடுத்து வருவது மட்டுமே இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள ஒரே ஆறுதல்.

ஏற்றுமதி கட்டுப்பாடுகள், தனிப்பட்ட பாதுகாப்பை அதிகரித்து, சர்வதேச அணு பாதுகாப்பு ஒத்துழைப்பு திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைளை பாகிஸ்தான் எடுத்துள்ளது.

ஆனால் பாகிஸ்தானை பொறுத்தவரை எப்போதுமே அரசியல் நிலையற்றத் தன்மை நிலவுவதால், அணு ஆயுத தளவாடங்களின் பாதுகாப்பு குறித்த கேள்விகள் எழவே செய்கின்றன.

ஒருவேளை பாகிஸ்தானை தீவிரவாதிகள் கைப்பற்றி விட்டால், உலகமே மிகப் பெரிய விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

-http://www.tamilwin.com

TAGS: