ஈராக்கை சேர்ந்தவர்கள் என்று கூறப்படும் 4 நபர்கள் தலைமறைவானதால் ஒடிசாவில் உச்சப்பட்ச பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள ஒரு ஹொட்டெலுக்கு 4 பேர் காரில் வந்துள்ளனர். மேலும் 3 பேர் காரிலேயே அமர்ந்திருக்க ஒரு நபர் மட்டும் ஹொட்டெலின் வரவேற்பு பகுதிக்கு வந்து,
தாங்கள் ஈராக்கில் இருந்து வந்திருப்பதாகவும் இரவு தங்குவதற்கு இரண்டு அறைகள் வேண்டும் என்று கேட்டுள்ளனர்.
அவர்களை பார்ப்பதற்கு சந்தேகப்படும்படியாக இருந்ததால் ஹொட்டெல் ஊழியர் அவர்களிடம் அடையாள அட்டை கேட்டுள்ளார். அடையாள அட்டை கேட்டவுடன் அவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சி.சி.டி.வி.-யில் பதிவான கார் எண்ணை வைத்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில்,
அவர்கள் வந்த காரின் பதிவு எண் போலியானது என்று தெரியவந்துள்ளது. கமெராவில் பதிவான ஒரு நபரின் படத்தை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
இதனால் அந்த நால்வரும் தீவிரவாதிகளாக இருக்கக் கூடும் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. தற்போது ஒடிசா மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு தலைமறைவானவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
-http://www.newindianews.com