ஐ.எஸ்.ஐ.எஸ். இல் இணைந்து தாக்குதலில் ஈடுபட தயாராக இருக்கும் 30,000 இந்தியர்கள்! இலங்கையரின் வீடுகள் சோதனை

is_slஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் சேர 30 ஆயிரம் இந்தியர்கள் தயாராக இருப்பது தெரிய வந்ததுள்ளது…… அத்துடன்…

ராக் மற்றும் சிரியாவில் வலுவாக உள்ள ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு இந்தியாவுக்குள் நுழைய பெரு முயற்சி செய்து வருகிறது.

இந்திய அரசு இணையதளங்களை ஹேக் செய்து முக்கிய தகவல்களை அளிக்கும் இந்தியர்களுக்கு ரூ.40 லட்சம் வரை தருவதாக அது அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்த அமைப்பு சமூக வலைதளங்களில் இந்திய சாப்ட்வேர் என்ஜினியர்களை அணுகி வருகிறது.

இந்நிலையில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் இந்தியாவில் வசிக்கும் 30 ஆயிரம் பேர் தொடர்பில் இருப்பது தெரிய வந்துள்ளது.

அந்த 30 ஆயிரம் பேரும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் சேர்ந்து தங்களின் தாய் நாடான இந்தியாவுக்கு எதிராக போராட தயாராக உள்ளனர்.

அந்த 30 ஆயிரம் பேரையும் ஐ.எஸ்.ஐ.எஸ் ஆன்லைன் மூலம் தொடர்பு கொண்டுள்ளது.

தற்போது அந்த 30 ஆயிரம் பேரையும் சைபர் குற்றப்பிரிவு அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். இதற்கிடையே ஐ.எஸ்.ஐ.எஸ் பற்றி தகவல்கள் உள்ள 94 இணையதளங்களை மகாராஷ்டிரா அரசு முடக்கியுள்ளது.

IS அமைப்பின் பிரச்சார வீடியோவில் காணப்பட்ட இலங்கையரின் வீடுகள் சோதனை இடப்பட்டன

கடந்த வருடம் 41  வயது இலங்கையரான முகமது உனைஸ் முகமது அமீன் என்ற இலங்கையர் ஐஎஸ் அமைப்பின் பிராச்சார வீடியோவில் தோன்றி அந்த அமைப்பின் சுகாதார சேவைக்கு ஆதரவை கோரியிருந்தார்.

ஐஎஸ் அமைப்பின் பிரச்சார வீடியோவில் காணப்பட்ட இலங்கையர் ஒருவரின் வீடுகளை அவுஸ்திரேலியாவின் பயங்கரவாத தடுப்பு பொலிஸார் சோதனையிட்டுள்ளனர்.

2014 இல் சிரியாவிற்கு தப்பியோடியுள்ள அமீன் அங்கு ஜஎஸ் அமைப்பில் மருத்துவராக பணியாற்றி வருகின்றார் , இதனை அவரே வீடியோவில் குறிப்பிட்டிருந்தார்.

வியாழக்கிழமை அதிகாலை குறிப்பிட்ட நபரின் வீடுகள் சோதனையிடப்பட்டதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மெல்பேர்னின் புறநகர் பகுதியிலேயே இந்த சோதனைகள் இடம்பெற்றுள்ளன. அமீனின் முன்னாள் மனைவிகளின் வீடுகளே சோதனையிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

-http://www.tamilwin.com

TAGS: