மாத்தி மாத்தி பேச மாட்டேன்.. நாந்தான் இந்திய தேசிய கொடிய கொளுத்துனேன்: பேஸ்புக்கில் திலீபன் மகேந்திரன் பதிவு

dhilepan (1)தேசிய கொடியை அவமதித்து தீயிட்டு கொளுத்தும் படங்களை நாகபட்டிணம் இளைஞர் திலீபன் மகேந்திரன் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

சமூக வலைதளங்களில் இந்த செய்தியும், அதுதொடர்பான படங்களும் வேகமாக பரவின. இதனை கண்டித்துள்ள தேசப்பற்றுள்ளவர்கள், தேசத் தலைவர்கள் மற்றும் தேசிய சின்னங்களை அவமதிப்பதை வழக்கமாக கொண்டுள்ளவர்களை இந்திய அரசாங்கம் வழக்கம் போல வேடிக்கைதான் பார்க்குமா இல்லை நடவடிக்கை எடுத்து தண்டிக்குமா? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்தநிலையில், திலீபன் மகேந்திரன் பேஸ்புக்கில் ஞாயிற்றுக்கிழமை (Time:01.05am date:31-01-2016) வெளியிட்டுள்ள பதிவில், நா இந்திய தேசிய கொடிய கொளுத்தல, அப்டின்னு சினிமா நடிகன் மாறியோ, இல்ல அரசியல்வாதி மாறியோ மாத்தி மாத்தி பேச மாட்டேன்..

நா உழைக்கும் வர்க்கத்திலிருந்து வந்தவன்.. உண்மைய மட்டுமே பேச தெரிஞ்சவன்.. நாந்தான் இந்திய கொடிய கொளுத்துனேன். தேசியக்கொடியை கொளுத்தினால் என்ன தப்பு? இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும், தமிழ்நாட்டை இந்தியா அடிமைப் படுத்தி வைத்திருக்கிறது. மறுக்க முடியுமா? இந்தியா ஒரு நாடல்ல.  நாங்கள் உழைக்கும் மக்கள்.. எங்க மேல சட்டம் நல்லா பாயும். இது எங்களுக்கு நல்லாவே தெரியும்.. கார்ப்ரேட் கம்பெணிகளின் ஊழியர்கள்தானே இந்திய நீதிமன்றங்கள்…

எனது தமிழினத்தை சூத்திரனாக இழிவுபடுத்தும் அரசியல் சட்டத்தை எரிப்பேன் என்றார் பெரியார் தேசியக்கொடியை எரிக்கும் போராட்டத்தை நடத்தினார் பெரியார். பெரியார் தேசியக் கொடியைக் கொளுத்தி அரை நூற்றாண்டு ஆகிறது. அதற்கான காரணம் இன்னும் இருக்கிறது. இன்னும் கருவறைக்குள் நுழையமுடியாமல் சூத்திரனாகத்தான் கேவலப்பட்டு நிற்கிறோம் என்றும் கூறியுள்ளார்.

-http://www.nakkheeran.in

இவன் தேசத் துரோகி என்றால் அப்படியே இருந்தவிட்டு போகட்டும்

•இவன் தேச துரோகி என்றால் அவ்வாறே இருந்துவிட்டு போகட்டும்

காலில் மிதிபடும் மண்புழு கூட துடித்து தன் எதிர்ப்பை காட்டுகிறது.

விளக்கில் விழும் விட்டில் பூச்சிகூட தன் எதிர்ப்பை காட்டுகிறது.

ஆனால் தமிழன் மட்டும் எதிர்ப்பு காட்டாமல் காலம் பூராவும் அடிமையாக இருக்க வேண்டும் என்றே இந்திய அரசு விரும்புகிறது.

இந்திய அரசு தமிழ் மக்களை அவமதிக்கிறது. என்றாலும் கொடியை எரிக்க கூடாது என்கிறார்கள்.

இந்திய அரசு தமிழ் மக்களை அலட்சியப்படுத்துகிறது. என்றாலும் கொடியை எரிக்க கூடாது என்கிறார்கள்.

இந்திய அரசு தமிழ்மக்களை புறக்கணிக்கிறது. என்றாலும் கொடியை எரிக்க கூடாது என்கிறார்கள்.

இந்திய அரசு தமிழ்மக்களை இழிவு படுத்துகிறது. என்றாலும் கொடியை எரிக்க கூடாது என்கிறார்கள்.

இந்திய அரசு தமிழ்மக்களுக்கு துரோகம் இழைக்கிறது. என்றாலும் கொடியை எரிக்க கூடாது என்கிறார்கள்.

இந்திய அரசு தமிழ்மக்களை வஞ்சிக்கிறது. என்றாலும் கொடியை எரிக்க கூடாது என்கிறார்கள்.

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்து மூத்த குடி தமிழ் என்கிறார்கள்.

அப்படியென்றால் முதல் தோன்றிய குரங்கு தமிழ் குரங்கு என்று பல கோடி ஆண்டுக்கு முந்திய வரலாற்றை தெரிந்து கொண்டவர்களுக்கு அண்மைக்காலத்தில் இந்திய அரசு தங்களை அடிமைப்படுத்தி வைத்திருப்பதை கண்டு கொள்ள தெரியவில்லையே!

இந்த இளைஞன் தமிழ் மக்களின் உணர்வையே வெளிப்படுத்தியுள்ளான்.

இவன் தேசத் துரோகி என்றால் அப்படியே இருந்தவிட்டு போகட்டும்.

ஏனெனில் இந்த தேசத் துரோகிதான் மழை வெள்ளத்தில் மக்களுக்கு உதவி செய்தவன்.

-https://www.facebook.com

TAGS: