இலங்கை பிரதமர் ரணிலுடன் சுஷ்மா சந்திப்பு! இருநாட்டு கூட்டு ஆணைய கூட்டத்திலும் பங்கேற்பு!!

sushma-swaraj_1டெல்லி/கொழும்பு: இலங்கைக்கு 2 நாட்கள் பயணமாக சென்ற மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அந்நாட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவை சந்தித்து பேசினார்.

கொழும்பில் ந்டைபெற்ற 9-வது இலங்கை- இந்தியா கூட்டு ஆணைய கூட்டத்திலும் சுஷ்மா பங்கேற்றார். மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இலங்கையில் 2 நாட்கள் பயணம் மேற்கொண்டுள்ளார்.

இன்று பகலில் கொழும்பு சென்றடைந்த அவர், அந்நாட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவை சந்தித்து பேசினார். இதன் பின்னர் இலங்கை- இந்தியா இடையேயான 9-வது கூட்டு ஆணைய கூட்டத்தில் சுஷ்மா ஸ்வராஜ் பங்கேற்றார்.

இதில் இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமரவீர கலந்து கொண்டார். இதில் இருதரப்பு வர்த்தக உறவுகள், புதிய வர்த்தக வாய்ப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேன, முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க ஆகியோரையும் சுஷ்மா சந்தித்து பேசுகிறார். இச்சந்திப்புகளின் போது இருநாட்டு நல்லுறவு, தமிழக மீனவர் பிரச்சனைக்கு தீர்வு உள்ளிட்டவை குறித்து இருநாட்டு தலைவர்களும் விவாதிக்க உள்ளனர்.

மேலும் சுஷ்மா ஸ்வராஜ் நாளை யாழ்ப்பாணம் செல்ல உள்ளதாக முதலில் கூறப்பட்டது. பின்னர் இந்த பயணம் கைவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டதால் தமிழர்கள் வாழும் யாழ்ப்பாணத்துக்கு செல்வாரா என்பதில் உறுதியான தகவல்கள் இல்லை.

முன்னதாக புதிய ஒப்பந்தங்கள் மூலம் இலங்கையின் இயற்கை வளங்களை இந்தியா கொள்ளையடிக்கப் போவதாக ராஜபக்சே ஆட்சிக் காலத்து வெளியுறவுத் துறை அமைச்சர் பீரிஸ், சுஷ்மா ஸ்வராஜின் வருகை குறித்து கடுமையாக சாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

tamil.oneindia.com

TAGS: