தமிழக கோயில்களில் ஆடை கட்டுப்பாடு: இளைஞர்களிடையே வரவேற்பு

dresscode_temple_001கோயில்களில் ஆடை கட்டுப்பாடு குறித்து எழுப்பப்பட்டுள்ள கேள்விக்கு பெரும்பாலான இளைஞர்கள் கட்டுப்பாடு தேவை என தெரிவித்துள்ளனர்.

தமிழக கோயில்களில் ஆடை கட்டுப்பாடு தேவை என்பதை பெரும்பாலான இளைஞர்கள் கலாச்சாரம் கருதி வரவேற்றுள்ளனர்.

கோயில்களில் கட்டாயம் ஆடை கட்டுப்பாடு இருக்க வேண்டும் என்றும், அதனால் மனத்தூய்மையுடன் வழிபாடுகளில் பங்கெடுக்க முடியும் எனவும் இளைஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பெரும்பாலான இளைஞர்கள் வரவேற்றுள்ள நிலையில், இந்த கட்டுப்பாடினால் கோயிலுக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்பு உள்ளதாகவும் சிலர் தெரிவித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் இந்து அறநிலையத் துறையின் கட்டுப் பாட்டில் 52 ஆயிரம் கோயில்கள் உள்ளன.

இந்த கோயில்கள் அனைத்திலும் ஜனவரி 1 ஆம் திகதியில் இருந்து பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு அமல்படுத்த வேண்டும் என உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.வைத்தியநாதன், கடந்த நவம்பரில் உத்தரவிட்டார்.

அந்த உத்தரவில், ‘ஆண்கள் மேலாடை, வேஷ்டி, பைஜாமா, வழக்கமான பேன்ட், சட்டையும், பெண்கள் சேலை, தாவணி, மேலாடையுடன் கூடிய சுடிதாரும்,

குழந்தைகள் முழுமையாக மூடப் பட்ட ஆடையும் அணிந்து வர வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில் ஆடை கட்டுப்பாடு விதிப்பது அரசியல் அமைப்பு சட்டம் வழங்கும் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது எனக் கூறி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கில்,

இந்து அறநிலையத்துறை கொண்டுவந்த ஆடை கட்டுப்பாட்டிற்கு இடைக்கால தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

-http://www.newindianews.com

https://youtu.be/sD9xNx5nAHc

TAGS: